ரோடு

ன்று ஈரோட்டில் தமிழக போக்குவரத்து அமைச்சர் சிவசங்கர் செய்தியாளர்களை சந்தித்துள்ளார்.

இன்று ஈரோடு மத்திய பேருந்து நிலையத்தில் நாகர்கோவில், மைசூர்,சக்தி ,கோவை, தேனி, திருநெல்வேலி போன்ற 15 வழித்தடத்தில் புதிய பேருந்துகளை தொடங்கி வைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் முத்துசாமி தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன் ஆகியோர் கொடியசைத்து தொடங்கி வைத்தனர்.

அப்போது போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர்செய்தியாளர்களிடம்

“போக்குவரத்து துறையில் காலி பணியிடங்களை நிரப்ப முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவின்பேரில் அரசு விரைவு போக்குவரத்துக் கழகத்தில் 688 பேருக்கு நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்பாக பணியாணை வழங்கப்பட்டது. மற்ற காலி பணியிடங்கள் நிரப்பும் பணி தொடங்கி உள்ளது. விரைவில்  காலி பணியிடங்கள் நிரப்பப்படும்..

விரைவில் சென்னையில் மின்சார பேருந்துகள் அறிமுகப்படுத்தப்படும். மினி பேருந்துகள் குறித்து வரைவு அறிக்கை மீதான பொதுமக்கள் கருத்து கேட்கப்பட்டு வருகிறது. ஜூலை 22ம் தேதி கால அவகாசம் உள்ள நிலையில் 22ம் தேதி உள்துறை செயலாளர் ஆய்வு கூட்டம் நடத்த உள்ளார். அதன் பிறகு முழு அறிக்கை தயார் செய்து முதல்வர் ஒப்புதல் பெறப்பட்டு புதிய வழித்தடத்தில் மினி பேருந்துகள் இயக்கப்படுகின்றன நடவடிக்கை எடுக்கப்படும்..

இதுவரை பேருந்து கட்டண உயர்வு குறித்து எங்களுக்கு எந்த தகவலும் வரவில்லை”

என்று தெரிவித்துள்ளார்.