சென்னை: தமிழ்நாட்டில் இன்று மிக கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக தெரிவித்துள்ள வானிலை ஆய்வு மையம் அதற்கான ஆரஞ்சு நிற எச்சரிக்கை கொடுத்துள்ளது.

இந்திய வானிலை ஆய்வு மையம்  வெளியிட்டுள்ள அறிவிப்பில் தமிழ்நாட்டில் இன்று (புதன்கிழமை) தமிழகத்துக்கு இன்று மிக கனமழைக்கான வாய்ப்பு இருப்பதாக கூறி, அதற்கான  ஆரஞ்சு எச்சரிக்கையை இந்திய வானிலை மையம் வெளியிட்டுள்ளது. மேலும்,  இந்த மழையானது   நாளைமுதல் தமிழகத்தில் மழை படிப்படியாக குறைந்து அடுத்த 7 நாள்களுக்கு தரைக்காற்றோடு கூடிய மிதமான மழை பெய்யும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும்,  தென்மேற்கு பருவமழையின் தீவிரம் காரணமாக கேரளம், கர்நாடக மாநிலங்களில் அடுத்த 3 நாள்களுக்கு மிக கனமழை தொடரும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக சென்னை வானிலை மையம்  வெளியிட்ட அறிக்கையில், கோவை, நீலகிரி மாவட்டங்களில் இன்றும் நாளையும் மிக கனமழை பெய்யக்கூடும் என்றும், மாநிலத்தில் பல்வேறு மாவட்டங்களில் மழை தொடரும் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர் உள்பட 17 மாவட்டங்களில் காலை 10 மணி வரை மழைக்கு வாய்ப்புள்ளதாக,  தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், இன்று நீலகிரி, கோவை மாவட்டங்களில் மிக கனமழையும், பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 24 மணிநேரத்தில் நீலகிரி மாவட்டம் அவலாஞ்சியில் 34 செ.மீ. மழையும், அப்பர்பவானியில் 21.7 செ.மீ. மழையும் பதிவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.