டெல்லி: நாடு முழுவதும் நீட் விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தி வரும் நிலையில், நீட் வினாத்தாள் வைக்கப்பட்டிருந்த பெட்டியின் சீலை டைத்து, வினாத்தாளை திருடிய நபரும், அவருக்கு உதவியவரையும் சிபிஐ போலீசார் கைது செய்துள்ளனர். இது தொடர்பாக 2 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர்.
நிகழாண்டு இளநிலை மருத்துவப் படிப்புக்கான தேசிய தகுதிகாண் நுழைவுத் தோ்வு எனப்படும் நீட் தேர்வு முடிவுகள் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி ள்ளது. தேர்வு எழுதியவா்களில் 1,500-க்கும் மேற்பட்டோருக்கு அந்தத் தோ்வை நடத்திய தேசிய தோ்வு முகமை (என்டிஏ) தன்னிச்சையாக 70 முதல் 80 மதிப்பெண்கள் வரை கருணை மதிப்பெண்கள் என்ற பெயரில் கூடுதலாக வழங்கியுள்ளது. நிகழ் கல்வியாண்டில், இளநிலை மருத்துவப் படிப்பு மாணவா்களுக்கான கலந்தாய்வு ஜூலை 6-ஆம் தேதி நடைபெறும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்ட நிலையில், உச்சநீதி மன்றத்தில் நடைபெற்று வரும் விசாரணையைத் தொடர்ந்து கலந்தாய்வு நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளது. நீட் தோ்வு குளறுபடிகள் சாா்ந்த பிற மனுக்கள் மீதான உத்தரவுக்கு உட்பட்டது எனத் தெரிவித்தது. நீட் தோ்வு வினாத்தாள் கசிந்ததால் அதை ரத்து செய்வது உள்பட நீட் தோ்வு குளறுபடிகளுக்கு எதிரான பிற மனுக்கள் மீது விசாரணை நடத்திய உச்சநீதிமன்றம் இதுதொடர்பாக தேசிய தேர்வு முகமை மற்றும் மத்தியஅரசுக்கு கடும் உத்தரவுகளை பிறப்பித்த உள்ளது.
இந்த நிலையில், நீட் முறைகேடு தொடர்பாக விசாரித்து வரும் சிபிஐ, நீட் வினாத்தாள் கசிவு காரணமாக, பீகார், குஜராத் உள்பட பல மாநிலங்களில் பலரை கைது செய்துள்ளனர். தைத்தொடர்ந்து, தற்போது, நீட் வினாத்தாளை சீல் வைக்கப்பட்ட பெட்டியில் இருந்து திருடிய நபரையும் கைது செய்துள்ளது.
வினாத்தாள் கசிவு வழக்கில் மேலும் 2 பேர் சி.பி.ஐ-யால் கைது செய்யப்பட்டுள்ளனர். அந்த இருவரில், பங்கஜ் குமார் என்ற ஆதித்யா, 2017-ம் ஆண்டு ஜாம்ஷெட்பூரின் தேசிய தொழில்நுட்ப நிறுவனத்தைச் சேர்ந்த சிவில் இன்ஜினியர் ஆவார். இவர் ஹசாரிபாக்கில் சீல் வைக்கப்பட்ட டிரங்க் பெட்டியில் இருந்து நீட் தேர்வு வினாத்தாளைத் திருடியதாகக் கூறப்படுகிறது. பொகாரோவில் வசிக்கும் குமார் பாட்னாவில் கைது செய்யப்பட்டதாக பி.டி.ஐ செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
குற்றம்சாட்டப்பட்ட மற்றொரு நபர், ராஜு சிங் என்று அடையாளம் காணப்பட்டுள்ளார். இவர் நீட் தேர்வு வினாத்தாளைத் திருட குமாருக்கு உதவியதாகக் கூறப்படுகிறது. ராஜு சிங் ஹசாரிபாக்கில் கைது செய்யப்பட்டார்.
இந்த இருவருடன், நீட் இளநிலை மருத்துவ நுழைவுத் தேர்வு வினாத்தாள் கசிவு, ஆள்மாறாட்டம் மற்றும் பிற முறைகேடுகள் தொடர்பாக கைது செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை தற்போது 14 ஆக உயர்ந்துள்ளது.
நீட் தேர்வு முறைகேடு தொடர்பாக சி.பி.ஐ 6 எஃப்.ஐ.ஆர்-களைப் பதிவு செய்துள்ளது. அவற்றில் பீகாரில் நீட் தேர்வு வினாத்தாள் கசிவு தொடர்பாக பதிவு செய்யப்பட்ட எஃப்.ஐ.ஆர் மற்றும் குஜராத், ராஜஸ்தான் மற்றும் மகாராஷ்டிராவில் இருந்து தேர்வர்கள் ஆள்மாறாட்டம் மற்றும் ஏமாற்றுதல் ஆகியவற்றுடன் தொடர்புடையது என தெரிவிக்கப்பட்டு ள்ளது.