கொல்கத்தா

மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜிக்கு ஆளுநரை பற்றி அவதூராக பேசக் கூடாது என கொல்கத்தா உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தொடர்ந்து மேற்கு வங்க மாநிலத்தில் முதல்-மந்திரி மம்தா பானர்ஜி தலைமையிலான அரசுக்கும், ஆளுநர் ஆனந்த போசுக்கும் இடையே மோதல் போக்கு நீடிக்கிறது.  இதனால் ஒருவரை ஒருவர் குற்றம் குறை கூறுவதும் அதிகரித்து காணப்படுகிறது.

மேற்கு வங்க ஆளுநர் மாளிகையில் பணியாற்றிய பெண் ஊழியா் ஒருவா், தனக்கு ஆளுந்ர் ஆனந்த போஸ் பாலியல் தொல்லை அளித்ததாக குற்றம் சாட்டியது அந்த மாநிலத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது. எனவே ஆளுநர் மாளிகைக்குச் செல்ல பெண்கள் அஞ்சுவதாக முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்தார்.

கொல்கத்தா உயர்நீதிமன்றத்தில் மம்தாவுக்கு எதிராக ஆனந்த போஸ் அவதூறு வழக்கு தொடுத்தார்.  மம்தாவுடன், திரிணாமுல் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் சயந்திகா பானர்ஜி, ரேயத் ஹொசைன் சர்க்கார் மற்றும் கட்சியின் தலைவர் குணால் கோஷ் ஆகியோரின் மீதும் அவதூறு வழக்கு தொடுக்கப்பட்டது.

நேற்று முந்தினம் நீதிபதி கிருஷ்ணா ராவ் முன்பு இவ்வழக்கு விசாரணைக்கு வந்தபோது, ஆளுருக்கு எதிராக அவதூறான கருத்து எதையும் தெரிவிக்கவில்லை என்றும் பொது நலன் சாா்ந்த விவகாரங்களில் நியாயமான கருத்தையே கூறியதாகவும் மம்தா தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது.

நேற்று இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது,

“மம்தா பானர்ஜி உள்ளிட்ட 4 பேரும் ஆகஸ்டு 14, 2024 வரை கவர்னர் ஆனந்த போசுக்கு எதிராக தவறான மற்றும் அவதூறு கருத்துகளை தெரிவிக்கவோ, அறிக்கைகளை வெளியிடவோ கூடாது”

என நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.