சென்னை: கல்விக் கண் திறந்த பெருந்தலைவர் காமராசர் அவர்களின் பிறந்தநாளில் #TNBreakfastScheme-ஐ விரிவுபடுத்தி அவருக்குப் பெருமை சேர்த்தேன்! காலை உணவுத் திட்டத்தான் மனநிறைவு அடைந்தேன் என  முதலமைச்சர் ஸ்டாலின் தனது சமூக வலைதள எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். முன்னதாக பள்ளியில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த காமராஜர் உருவப்படத்துக்கு முதலமைச்சர் ஸ்டாலின் மலர்தூவி மரியாதை செய்தார்.

விரிவாக்கம் செய்யப்பட்டவுடன் தமிழ்நாடு முழுக்க எத்தனைக் குழந்தைகளுக்கு உணவளிக்கப்பட்டது என்பதை #CMDashBoard வழியாகக் கண்காணித்து, மாணவச் செல்வங்களின் பசிப் போக்கிய மனநிறைவு அடைந்தேன் என குறிப்பிட்டுள்ளார்.

தமிழ்நாடு முழுவதும் இன்று காமராஜர் பறிந்தநாள் கொண்டாடப்பட்டு வருகிறது. அதே வேளையில், அரசு உதவி பெறும் பளியில் இன்று முதலமைச்சர் ஸ்டாலின் காலை உணவு திட்டத்தின் விரிவாக்கத்தை தொங்கி வைத்தார். இதையடுத்து அந்த பள்ளிக்கு வந்த முதலமைச்சர் ஸ்டாலின், காமராஜரின் 122வது பிறந்தநாளை யொட்டி, அங்கு அலங்கரித்து வைக்கப்பட்டு இருந்த காமராஜர் உருவப்படத்துக்கு மலர்தூவி மரியாதை செய்தார்.

 முதலமைச்சரின் காலை உணவு திட்டம் தொடங்கப்பட்டு வெற்றிகரமாக செயல்பட்டு வருகிறது. கடந்த ஆண்டு, அரசு பள்ளிகளில் தொடங்கப்பட்ட இந்த திட்டம் இன்று அரசு உதவி பெறும் பள்ளிகளிலும் விரிவாக்கம் செய்யப்பட்டு உள்ளது. இதன் தொடக்க விழா காமராஜர் பிறந்தநாளான இன்று (ஜூலை 15) அன்று  திருவள்ளூர் மாவட்டம் கடம்பத்தூர் ஒன்றியம், கீழச்சேரி கிராமத்தில் உள்ள புனித அன்னாள் அரசு உதவி பெறும் தொடக்கப் பள்ளியில், காலை உணவு திட்டத்தின் விரிவாக்க திட்டத்தை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.  மேலும் அங்கு பல்வேறு திட்டங்களையும் தொடங்கி வைத்தார்.

இதுகுறித்து முதலமைச்சர் ஸ்டாலின் தனது சமூக வலைதள பக்கமான எக்ஸ் பக்கத்தில், #TNBreakfastScheme விரிவாக்கம் செய்யப்பட்டவுடன் தமிழ்நாடு முழுக்க எத்தனைக் குழந்தைகளுக்கு உணவளிக்கப்பட்டது என்பதை #CMDashBoard வழியாகக் கண்காணித்து, மாணவச் செல்வங்களின் பசிப் போக்கிய மனநிறைவு அடைந்தேன்!

கல்விக் கண் திறந்த பெருந்தலைவர் காமராசர் அவர்களின் பிறந்தநாளில் #TNBreakfastScheme-ஐ விரிவுபடுத்தி அவருக்குப் பெருமை சேர்த்தேன்! மங்காப் புகழ்கொண்ட அவரது வாழ்வையும் தொண்டையும் #கல்விவளர்ச்சிநாள்-இல் தமிழ்நாட்டு மாணவர்களுக்குப் பயிற்றுவிப்போம்! என குறிப்பிட்டுள்ளார்.

https://x.com/i/status/1812742511536083003