சென்னை: அண்ணாமலை படத்துடன் ஆடு வெட்டியதை வேடிக்கை பார்க்க முடியாது என கடுமையாக சாடியுள்ள உயர்நீதிமன்றம், இதுதொடர்பாக  தமிழக அரசு பதிலளிக்க  உத்தரவிட்டு உள்ளது.

மக்களவைத் தேர்தலில் கோவை தொகுதியில் போட்டியிட்ட அண்ணாமலை தோல்வியை தழுவினார். இதனைக் கொண்டாடும் வகையில், கிருஷ்ணகிரியில் திமுக தொண்டர்கள் அண்ணாமலை உருவபடத்தின் முன் சாலையில் ஆடு வெட்டிக் கொண்டாடினர். இந்த காணொலிகளும், புகைப்படங்களும் இணையத்தில் வைரலான நிலையில், இந்த விவகாரத்தில் திமுக தொண்டர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கக் கோரி, பாஜக பிரமுகர் மோகன்தாஸ் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கை திங்கள்கிழமை விசாரித்த உயர்நீதிமன்றம், சாலையில் அண்ணாமலையின் புகைப்படத்தை வைத்து ஆடு வெட்டியதை வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்க முடியாது என்று அதிருப்தி தெரிவித்துடன்,  இந்த விவகாரத்தில் தமிழக அரசு பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கின் விசாரணையை ஒத்திவைத்தனர்.

முன்னதாக,  மக்களவை தேர்தலில் கோவை தொகுதியில் போட்டியிட்ட அண்ணாமலை தோல்வியை சந்தித்த நிலையில், திமுகவினர்,  அண்ணாமலையின் படத்தை ஆட்டின் கழுத்தில் கட்டி, அதனை சாலையின் குறுக்கே படுக்கவைத்து வெட்டி, சிலர் விடியோ வெளியிட்டிருந்தனர்.  இந்த வீடியோ வைரலானது.  இதற்கு  தமிழக பாஜக கண்டனம் தெரிவித்திருந்தது. மேலும், இதை வேடிக்கை பார்த்த காவல்துறையினரின் நடவடிக்கையும், மாநில அரசின் நடவடிக்கை எடுக்காத

தமிழக பாஜக துணைத் தலைவரும் செய்தித் தொடர்பாளருமான நாராயண் திருபாதி, தனது எக்ஸ் பக்கத்தில் அந்த விடியோவை பகிர்ந்து கடும் கண்டனத்தைப் பதிவு செய்துள்ளார். அண்ணாமலைக்கு எதிராகக் குரல்கொடுத்துக் கொண்டு நடுரோட்டில் வைத்து ஆட்டை வெட்டி விடியோ பதிவிட்டுள்ளனர். இதன் மூலம், தமிழகத்தில் பாஜக வளர்வது அரசியல் கட்சியினருக்கு அச்சத்தை ஏற்படுத்தியிருக்கிறது. அதைத் தான் இந்தநடவடிக்கை மூலம் தெரிய வருகிறது. இது மிகவும் தரம் தாழ்ந்த அரசியல் என்று பதிவிட்டுள்ளார். இந்த விடியோவில், சின்ன சின்ன குழந்தைகள் அண்ணாமலைக்கு எதிராகக் கோஷம் எழுப்புவதும் பதிவாகியிருக்கிறது. இது மிகவும் கண்டிக்கத்தக்கது. இந்த நடவடிக்கையில் ஈடுபட்டவர்களை தண்டிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியிருந்தார்.

இதுதொடர்பான வழக்கை விசாரித்த உயர்நீதி மன்றத்தில், மாநில அரசு மற்றும் காவல்துறை நடவடிக்கை எடுக்காததை கண்டித்ததுடன், இதுபோன்ற செயல்களை வேடிக்கை பார்க்க முடியாது என்று கூறியதுடன், இந்த சம்பவம் குறித்து தமிழ்நாடு அரசு பதில் அளிக்க உத்தரவிட்டு வழக்கை ஒத்தி வைத்தது.

நடு ரோட்டில் அண்ணாமலைக்குஎதிராக வெட்டப்பட்ட ஆடு : தமிழகத்தில் பரபரப்பு