சென்னை:  விடுதலைப் போராட்ட வீரர் அழகு முத்துக்கோன் பிறந்த நாளையொடிடி, அவரது உருவச்சிலைக்கு முதலமைச்சர்  ஸ்டாலின் மரியாதை செலுத்தினார்.
சுதந்திரப் போராட்ட வீரர் மாவீரன் அழகு முத்துக்கோனின் 314-வது பிறந்தநாள் இன்று தமிழகம் முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில், சென்னை எழும்பூர் ரெயில் நிலையம் அருகில் அமைந்துள்ள மாவீரன் அழகு முத்துக்கோன் திருஉருவச் சிலைக்கு  தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின், எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி  உள்பட அரசியல் கட்சி தலைவர்கள் மலர்தூவி மரியாதை செய்து வருகின்றனர்.

சுதந்திர போராட்ட வீரர் அழகு முத்துக்கோனின் 314 ஆவது பிறந்தநாளையொட்டி, எழும்பூரில் உள்ள சிலை  மலர்களால் அலங்கரிக்கப்பட்ட மாவீரன் அழகு முத்துக்கோனின் திருவுருவச்சிலை  திருவுருவச்சிலைக்குக் கீழ் வைக்கப்பட்டுள்ள மாவீரன் அழகு முத்துக்கோனின் உருவப்படம் வைக்கப்பட்டுள்ளது. அதற்க முதலமைச்சர் ஸ்டாலின்  மலர் தூவி மரியாதை செலுத்தினார். முதலமைச்சருடன் அமைச்சர்கள் பெரிய கருப்பன், ராஜகண்ணப்பன், பி.கே.சேகர்பாபு, எம்.எல்.ஏ.க்கள் தாயகம் கவி, பரந்தாமன், ஜோசப் சாமுவேல், முன்னாள் எம்.எல்.ஏ. ப.ரங்கநாதன், ரவிச்சந்திரன், மேயர் பிரியா, துணைமேயர் மகேஷ் குமார் மற்றும் அரசு துறை உயர் அதிகாரிகள் கலந்து கொண்டு மரியாதை செலுத்தினார்கள்.

அதைத்தொடர்ந்து,. அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மலர்தூவி மரியாதை செலுத்தினார். இந்நிகழ்ச்சியில், மாவட்டக் கழகச் செயலாளர்கள், கழக பாராளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், முன்னாள் அமைச்சர்கள், உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் பங்கேற்று மரியாதை செலுத்தினர்.

அழகு முத்துக்கோனின் 314-வது பிறந்தநாள் இன்று தமிழகம் முழுவதும் கொண்டாடப்பட்டது. இந்நிலையில் சென்னை எழும்பூர் ரெயில் நிலையம் அருகே உள்ள சுதந்திர போராட்ட வீரர் அழகு முத்துக்கோன் சிலைக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும்