புதுக்கோட்டை

புதுக்கோட்டையை சேர்ந்த 13 தமிழக மீன்வர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர்.

Alleppey,India-July 23,2009: Fishing in Arabian sea by local fishermen July 23, 2009 in Alleppey, India.

சமீபகாலமாக தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்படும் சம்பவங்கள் அதிகரித்துவருகின்றன.  ஏற்கனவே எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி ராமேஸ்வரம், பாம்பன் பகுதியைச் சேர்ந்த 25 மீனவர்கள் 4 நாட்டு படகுகளில் ஜுலை 1ஆம் தேதி கடலுக்கு சென்ற போது இலங்கை கடற்படை கைது செய்தது

இந்த சம்பவத்தை கண்டித்து ராமேஷ்வர மீனவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர் என்பது குறிப்பிடதக்கது. இந்த சம்பவத்தை கண்டித்து ராமேஷ்வர மீனவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர் என்பது குறிப்பிடதக்கது. நேற்று நெடுந்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது, எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கைது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இலங்கை கடற்படையினரால் புதுக்கோட்டை மாவட்ட மீன்பிடி துறைமுகத்திலிருந்து கடலுக்குச் சென்ற நிலையில், 13 பேர் கைது செய்யப்பட்டு அவர்கள் பயன்படுத்த்ய 3 விசைப்படகுகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இவ்வாறு கைது செய்யப்பட்ட மீனவர்கள் காங்கேசன் துறைமுகத்தில் வைத்து விசாரிக்கப்பட்டு வருகின்றனர்.