சென்னை

மிழக முதல்வர் குறித்து சமூக வலைதளங்களில் வதந்தி பரப்பியதாஅ ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

வர்பில் நெட் என்பவர் திருப்பூர் மாவட்டம், உடுமலை அருகே மடத்துக்குளத்தை அடுத்த ஜோத்தம்பட்டியைச் சேர்ந்தவர் ஆவார்.  நெசவுத்தொழில் செய்து வரும் இவர் தமிழக முதல்வர், சென்னை மாநகர ஆணையர் அருண், உச்சநீதிமன்ற நீதிபதிகள் ஆகியோர் குறித்து சமூக வலைத்தளங்களில் அவதூறாகவும், ஆபாசமாகவும் வதந்திகளை பதிவிட்டுள்ளார்.

இவ்ர்

“வெடிகுண்டு வைத்து பிரிவினைவாத, தீவிரவாத பிணங்களை கூவத்தில் எரிக்கும் படி இந்திய அரசு, ராணுவம் மற்றும் அனைத்து மாநில அரசு அனைத்து மாநில காவல்துறைக்கு உத்தரவு பிறப்பிக்கிறேன். குறிப்பாக தமிழ்நாட்டு காவல்துறைக்கு உத்தரவு பிறப்பிக்கிறேன்

என்றும் சமூக வலைத் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

இந்த பதிவின் அடிப்படையில் கணியூர் காவல்துறையினர் வர்பில்நெட் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர், பிறகு அவரை மடத்துக்குளம் ஜே.எம். நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.