சென்னை
சென்னை நகரில் நேற்று நள்ளிரவு மழை பெய்துள்ளது

செனனை வானிலை ஆய்வு மையம் மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 24 மணிநேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் மாலை மற்றும் இரவு வேளையில் இடி, மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்யக்கூடும் என்று அறிவித்தது.
அதன்படி நேற்ரி இரவு சென்னையின் பல்வேறு பகுதிகளில் மழை பெய்தது. நகரில் எழும்பூர், புரசைவாக்கம், சென்டிரல், சேத்துப்பட்டு, பட்டினப்பாக்கம், சேப்பாக்கம், திருவல்லிக்கேணி, அண்ணா சாலை, தேனாம்பேட்டை, வள்ளுவர் கோட்டம், நுங்கம்பாக்கம், கோடம்பாக்கம், வடபழனி, கிண்டி நகரின் பல்வேறு பகுதிகளில் இரவு மழை பெய்துள்ளது.
Patrikai.com official YouTube Channel