சண்டிகர்
பாஜக எம் பி கங்கணா ரணாவத்தை கன்னத்தில் அறைந்த பெண் காவலர் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
கடந்த மாதம் பிரபல நடிகையும், இமாச்சலப் பிரதேசத்தின் மண்டி தொகுதியின் பாஜக எம்பியுமான கங்கனா ரனாவத் டெல்லி செல்வதற்காக, சண்டிகர் விமான நிலையத்துக்கு சென்றுள்ளார். பாதுகாப்பு சோதனைக்கு பிறகு கங்கனாவுக்கும், அங்கிருந்த மத்திய தொழிலக பாதுகாப்பு படை பெண் அதிகாரி குல்விந்தர் கவுருக்கும் வாக்குவாதம் எழுந்த நிலையில் அந்த அதிகாரி கங்கனாவை கன்னத்தில் அறைந்தார்.
இதுகுறித்து டெல்லியில் சிஐஎஸ்எஃப் இயக்குநர் ஜெனரல் நினா சிங்கிடம் கங்கனா புகார் அளித்தார். விசாரணையில் டெல்லியில் போராட்டம் நடத்திய விவசாயிகளை கங்கனா தீவிரவாதிகள் என விமர்சித்ததற்காக இந்த தாக்குதலை அவர் நடத்தியதாக தெரியவந்தது. இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
இதையொட்டி சிஐஎஸ்எஃப் காவலர் குல்விந்தர் கவுர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டாலு, குல்விந்தர் கவுரின் இந்த செயலுக்கு சமூக வலைதளங்களில் பாரட்டுகள் குவிந்தன. தற்போது குல்விந்தர் கவுர் சண்டீகர் விமான நிலையத்திலிருந்து பெங்களூருவுக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.