சென்னை: திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலுக்கு 2-வது மாஸ்டர் பிளான் தயாரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும், பக்தர்கள் வசதிக்காக ரூ.36 கோடியில் பணிகள் நடந்து வருகின்றன என சட்டப்பேரவையில் அமைச்சர் சேகர்பாபு  கூறினார்.

தமிழ்நாட்டு சட்டப்பேரவையின் இன்றைய கேள்வி நேரத்தின்போது,   சட்டமன்ற உறுப்பினர்  பிச்சிசாண்டி, தினசரி லட்சக்கணக்கான பக்தர்கள் வருவதால் அடிப்படை வசதிகளை மேற்கொள்ள வேண்டும் என்றும், அதேபோல் தங்க வைப்பு நிதி மூலம் வங்கிகளில் எவ்வளவு கையிருப்பு வைக்கப்பட்டுள்ளது , திருவண்ணாமலையில் பக்தர்களின் வசதிக்காக மாஸ்டர் பிளான் உள்ளதா என கேள்வி எழுப்பினார்.

இதற்கு பதில் கூறிய அமைச்சர் சேகர்பாபு,  : திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலுக்கு 2-வது மாஸ்டர் பிளான் விரைவில் போடப்பட உள்ளதோடு, இந்து சமய அறநிலையத்துறை மானிய கோரிக்கையில் பல்வேறு அறிவிப்புகள் வெளியிடப்பட உள்ளதாக  தெரித்தார்.

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலுக்கான மாஸ்டர் பிளான் திட்டம் தயாராகி உள்ளதா எனவும்,  எனவும் சட்டமன்ற உறுப்பினர் பிச்சாண்டி கேள்வி எழுப்பினார்.

மேலும்,  திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவில் பணிகள் குறித்து மாவட்ட அமைச்சர் எ.வ.வேலு தலைமையில் 10 நாட்களுக்கு ஒருமுறை ஆலோசனைக் கூட்டம் நடத்தப்பட்டு வருவதாக கூறினார். மேலும், திருவண்ணாமலை கோவிலுக்காக முதற்கட்ட மாஸ்டர் பிளான் திட்டத்திற்காக ரூ.36.41 கோடியில் ஒப்பந்தம் கோரப்பட்டு பணிகள் நடைபெறுவதாக கூறியவர்,

திருவண்ணாமலை கோவிலுக்கு ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா உட்பட பல்வேறு மாநிலங்களில் இருந்தும் பவுர்ணமி நாளில் 30 லட்சத்துக்கும் மேற்பட்டோர் வருகை தருகின்றனர் என்றும், பக்தர்களுக்கான வசதிகளை மேம்படுத்த 2வது மாஸ்டர் பிளான் விரைவில் போடப்பட உள்ளதோடு, இந்து சமய அறநிலையத் துறை மானிய கோரிக்கையில் பல்வேறு அறிவிப்புகள் வெளியிடப்பட உள்ளதாகவும் கூறினார்.

அதேபோல், கோவில் தங்கங்களை உருக்கும் பணி மூலம் கோவில் தங்கங்கள் உருக்கப்பட்டு தங்கக் கட்டிகளாக மாற்றப்பட்டு ரூ.5.74 கோடி வைப்பு நிதி வங்கிகளில் வைக்கப்பட்டு உள்ளதாக தெரிவித்த அவர், தங்கக் கட்டிகள் வைப்பு நிதி மூலம் கிடைக்கும் வருவாய் மூலம் 14 கோயில்களில் திருப்பணி மேற்கொள்ளப்படுவதாகவும் குறிப்பிட்டார்.