டெல்லி

டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் ஜாமின் கோரி உச்சநீதிமன்றத்தில் மெல்முறையீடு செய்துள்ளார்.

கடந்த மார்ச் மாதம் 21 ஆம் தேதி மதுபான கொள்கை வழக்கு தொடர்பாக டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டார்.  கெஜ்ரிவாலின் ஜாமின் மனுவை ஏற்ற விசாரணை நீதிமன்றம் கடந்த 20ம் தேதி ஜாமீன் வழங்கியது.  ஆனால் அமலாக்கத்துறை அதனை எதிர்த்து டெல்லி உயர் நீதிமன்றத்தை அணுகியது.

டெல்லி உயர்நீதிமன்றம் இந்த வழக்கினை அவசர வழக்காக விசாரித்து, கெஜ்ரிவாலின் ஜாமீனை நிறுத்தி வைப்பதாக உத்தரவிட்டது  டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் திகார் சிறையில் இருந்து கடந்த 21ம் தேதி வெளியேறுவதாக இருந்த நிலையில்,  இந்த திடீர் உத்தரவு வந்தது.

எனவே, மதுபான கொள்கை வழக்கில் தனக்கு விதிக்கப்பட்ட ஜாமீன் உத்தரவுக்கு டெல்லி உயர் நீதிமன்றம் தடை விதித்ததை எதிர்த்து டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் இன்று உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.