சேலம்
நாளை கரூர் வரை மட்டுமே சேலம் – மயிலாடுதுறை ரயில் இயங்கும் என ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.
சேலம் ரயில்வே கோட்ட அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,
”நாளை திருச்சி கோட்டம் குளித்தலை- பேட்டைவாயத்தலை ரெயில் நிலையங்களுக்கு இடையே பொறியியல் பராமரிப்பு பணி நடைபெற உள்ளது, எனவே சேலம்- மயிலாடுதுறை வழித்தடத்தில் 24, 27 ஆம் தேதிகளில் ரெயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
அதன்படி சேலம் – மயிலாடுதுறை ரயில் (16812) நாளை சேலத்தில் இருந்து கரூர் வரை மட்டுமே இயக்கப்படும். மேலும் நாளை கரூரில் இருந்து மயிலாடுதுறைக்கு முன்பதிவு இல்லாத சிறப்பு ரயில் இயக்கப்படும்.
சேலம்- மயிலாடுதுறை ரெயில் (16812) வருகிற 27 ஆம் தேதி சேலத்தில் இருந்து கரூர் வரை மட்டுமே இயக்கப்படும். இதைப்போல 27 ஆம் தேதி அன்று கரூரில் இருந்து மயிலாடுதுறைக்கு முன்பதிவு இல்லாத சிறப்பு ரெயில் இயக்கப்படும்.”
என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.