டெல்லி

ன்று நடைபெற இருந்த முதுகலை படிப்புக்களுக்கான நீட் தேர்வு தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

கடந்த மே மாதம் 5 ஆம் தேதி இளநிலை மருத்துவப்படிப்புகளுக்காக நடத்தப்பட்ட நீட் நுழைவுத் தேர்வில் பல்வேறு முறைகேடுகள் நடந்திருப்பது அடுத்தடுத்து வெளி  வந்த வண்ணம் உள்ளது. இது தொடர்பாக கைது, வழக்கு, விசாரணை என பெரும் சர்ச்சைகள் நடந்து வருகின்றன.

இன்று முதுநிலை மருத்துவப்படிப்புகளுக்கான நீட் நுழைவுத் தேர்வு நடைபெறுவதாக இருந்தது. இளநிலை நீட் தேர்வில் நடந்த குளறுபடிகளால் முதுநிலை நீட் தேர்வை மிகவும் நேர்மையாக நடத்துவது குறித்து சுகாதார அமைச்சகம் ஆய்வு செய்து வருகிறது.

ஆகவே முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இன்று நடைபெற இருந்த முதுநிலை நீட் நுழைவுத் தேர்வை தள்ளிவைப்பதாக சுகாதார அமைச்சகம் அறிவித்து உள்ளது. மேலும் தேர்வுக்கான புதிய தேதி விரைவில் அறிவிக்கப்படும் என்றும் அமைச்சகம் தெரிவித்துள்ளது.