ழனி

ன்று பராமரிப்பு பணி காரணமாக பழனி முருகன் கோவில் ரோப் கார் சேவை நிறுத்தப்பட்டுள்ளது.

பழனி மலை மீது உலக பிரசித்தி பெற்ற முருகன் கோவில் அமைந்துள்ளது.  மலைஅடிவாரத்தில் இருந்து கோவிலுக்கு செல்ல படிப்பாதை, யானைப்பாதை பிரதான வழிகளாக உள்ளன. பக்தர்கள் மலைக்கோவிலுக்கு எளிதாக சென்று வர ரோப்கார், மின்இழுவை ரெயில் ஆகிய சேவைகள் பயன்பாட்டில் உள்ளது.

இயற்கை அழகை ரசித்தபடி செல்லலாம் என்பதால், பெரும்பாலானோர் ரோப்காரில் செல்ல ஆர்வம் காட்டுகின்றனர். இது வெளியூர் பக்தர்களுக்கு சிறந்த சுற்றுலா அனுபவத்தை கொடுக்கிறது.

பக்தர்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு இந்த ரோப்கார் நிலையத்தில் மாதாந்திர, வருடாந்திர பராமரிப்பு பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. எனவே, பழனி முருகன் கோவில் ரோப்கார் நிலையத்தில் இன்று  மாதாந்திர பராமரிப்பு பணி நடைபெறுகிறது.

இதனால் ரோப்கார் சேவை இன்று நிறுத்தப்படுகிறது. இதனால் பக்தர்கள் மின்இழுவை ரெயில், படிப்பாதையை பயன்படுத்தி மலைக்கோவிலுக்கு செல்லலாம் என்று கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.