சென்னை: அரசு கேபிள் டிவி ஒளிபரப்பில் ஏற்பட்டுள்ள தடையை சரி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக கேபிள் டிவி ஆபரேட்டர்கள் பொது நல சங்கம் முதல்வருக்கு கோரிக்கை விடுத்துள்ளன.

வளர்ந்து வரும் தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி மக்களுக்கு மலிவு விலையில் உயர்தர கேபிள் டிவி, இ-சேவை மற்றும் இணைய சேவைகளை வழங்குவதே இந்த தொலை நோக்கு பார்வையாக தமிழ்நாடு அரசு அரசு கேபிள் நிறுவனத்தை தொடங்கியது. மறைந்த முதல்வர் ஜெயலலிதா தலைமையிலான ஆட்சியின்போது, 2011ம் ஆண்டு, தமிழ்நாடு அரசு அரசு கேபிள் நிறுவனம்எ னப்படு TACTV ஆனது 04.10.2007 அன்று நிறுவனங்கள் சட்டம், 1956 இன் கீழ்  தொடங்கப்பட்டது. அதன்படி,  பொதுமக்களுக்கு மலிவு விலையில் உயர்தர கேபிள் சிக்னல்களை வழங்கும் நோக்கத்துடன் இணைக்கப்பட்டது. இந்த இலக்கை அடைய, தஞ்சை, கோயம்புத்தூர், திருநெல்வேலி மற்றும் வேலூர் ஆகிய இடங்களில் தலா ரூ.8 கோடி செலவில் உயர்தர டிஜிட்டல் ஹெட் எண்ட்கள், மதுரை மற்றும் திருச்சியில் கட்டுப்பாட்டு அறைகள் மற்றும் கட்டுப்பாட்டு அறைகள் இல்லாமல் நிறுவப்பட்டன.

டிஜிட்டல் கேபிள் டிவி சேவைகளை விநியோகிப்பதற்காக இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையத்தின் (டிராய்) விதிமுறைகளின் கீழ் அதிகபட்ச வாடிக்கையாளர் தளத்தை அடையவும், கார்ப்பரேஷனில் பதிவு செய்யப்பட்ட LCO களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துதல் மற்றும், உள்ளாட்சி அமைப்புகள், தாலுகா அலுவலகங்கள் மற்றும் மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களில் உள்ள அரசு இ-சேவை மையங்கள் மூலம் குடிமக்களை மையப்படுத்திய சேவைகளை வழங்குதல் ஒவ்வொரு வீட்டிற்கும் இணைய இணைப்பு வழங்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு வசதிகளுக்கான தொடங்கப்பட்டது.

 நலனுக்காக முன்மாதிரியான இ-சேவை முன் அலுவலகங்களை நிறுவுதல் எல்சிஓக்கள் மூலம் பொதுமக்களுக்கு மலிவு விலையில் உயர்தர இணைய சேவையை வழங்கப்பட்டு வந்தது. பெரும்பாலான கிராமங்களில் இன்றுவரை டாக்டிவி செயல்பட்டில் உள்ளது.

இந்த நிலையில், ஜூன் 15ந்தேதி முதல்   ‘அரசு கேபிள், ‘டிவி’ ஒளிபரப்பில்  தடை ஏற்பட்டுள்ளது. இது கேபிள் ஆபரேட்டர்களிடையே சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.  ஒளிபரப்பு தடை நீக்கப்படுமா அல்லது, முழுமையாக தடை செய்யப்படுமா என்பது குறித்தும் கேள்வி எழுப்பப்பட்டு வருகிறது. இதனால், டாக்டிவி ஒளிரப்பில் ஏற்பட்டுள்ள தடையை சரி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என, தமிழக கேபிள், ‘டிவி’ ஆபரேட்டர்கள் பொது நல சங்கம் முதல்வருக்கு கோரிக்கை விடுத்துள்ளது.

இதுதொடர்பாக கேபிள் டிவி உரிமையாளர்கள்எ சங்கத்தின் மாநில தலைவர் வெள்ளைச்சாமி, முதல்வருக்கு அனுப்பியுள்ள மனுவில்,  தமிழக அரசு கேபிள், ‘டிவி’ வாடிக்கை யாளர்கள், 10 லட்சம் பேர் உள்ளனர். நேற்று முன்தினம் காலை 5:00 மணி முதல், கேபிள், ‘டிவி’ ஒளிபரப்பு தடை செய்யப்பட்டுள்ளது. இதனால், வாடிக்கையாளர்கள் கடும் துயரத்திற்கு ஆளாகி உள்ளனர்.

அரசு கேபிள், ‘டிவி’ ஆபரேட்டர்கள், 10,000த்துக்கும் மேற்பட்டோர், வாடிக்கையாளர்கள் கேட்கும் கேள்விகளுக்கு பதில் அளிக்க முடியாமல் திணறுவதோடு, தங்கள் வாழ்வா தாரத்தை இழக்கும் நிலை உருவாகி உள்ளது.

அரசு கேபிள், ‘டிவி’ நிறுவனத்தின் நிர்வாகிகளை தொடர்பு கொண்டபோது, ‘சாப்ட்வேர் பிரச்னை’, சில தினங்களில் சரியாகிவிடும் என்கின்றனர். ஏற்கனவே ஆறு மாதங்களுக்கு முன், இதேபோல பல நாட்கள் ஒளிபரப்பில் தடை ஏற்பட்டது. பல வாடிக்கையாளர்கள் கார்ப்பரேட் நிறுவனங்கள் நடத்தும், ‘டி.டி.எச்’.,க்கு மாறி விட்டனர்.

இதனால், ஆபரேட்டர்கள் வருமானத்தை இழந்தனர். மீண்டும் அதே பிரச்னை தொடர்கதையாக இருக்கிறது. படித்த இளைஞர்கள் சுய தொழிலாக செய்யும், இந்த தொழிலை இழக்க வேண்டிய நிலைமை ஏற்படுகிறது. எனவே, முதல்வர் தலையிட்டு, இப்பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும்.

இவ்வாறு  கூறியுள்ளார்.