சென்னை
நேற்று நள்ளிரவு சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கனமழை பெய்துள்ளது.

நேற்று பகல் முழுவதும் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கடும் வெப்பம் வாட்டி வதைத்தது. பகலில் வெயிலின் \ பகலில் அதிகம் இருந்த நிலையில், நள்ளிரவில் திடீரென இடி, மின்னலுடன் பலத்த மழை பெய்தது.
குறிப்பாக ஈக்காட்டு தாங்கல், அசோக்நகர், எழும்பூர், சென்டிரல், ராயப்பேட்டை, நுங்கம்பாக்கம், வள்ளுவர் கோட்டம், மீனம்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் கன மழை பெய்தது.
சென்னை புறநகர் பகுதிகளிலும் கனமழை பெய்தது நேற்றைய கனமழையால் வெப்பம் தணிந்துள்ளது. எனவே மக்கள் மிகவும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
Patrikai.com official YouTube Channel