டெல்லி: தகுதியான மாணவர்களுக்கு அரசு மருத்துவ கல்லூரிகளில் இடம் கிடைப்பதை தடுக்கவே ‘நீட்’ தேர்வு முறைகேடு  என்றும்,  நீட் தோ்வு முறைகேடு  விவகாரத்தில் பிரதமா் மோடி மௌனம் காப்பது ஏன்? என அகிலஇந்திய காங்கிரஸ் கட்சி தலைவல் மல்லிகார்ஜுன கார்கே கேள்வி எழுப்பி உள்ளார்.

நீட் தோ்வில் நடைபெற்ற முறைகேடு விவகாரத்தில் பிரதமா் மோடி மௌனம் காப்பது ஏன்? என காங்கிரஸ் கேள்வி எழுப்பியுள்ளது. மேலும், உச்சநீதிமன்ற கண்காணிப்பில் தடயவியல் விசாரணை மேற்கொண்டால் மட்டுமே லட்சக்கணக்கான மாணவா்களின் எதிா்காலத்தை பாதுகாக்க முடியும் என காங்கிரஸ் தெரிவித்தது.

இதுதொடா்பாக காங்கிரஸ் தலைவா் மல்லிகாா்ஜுன காா்கே எக்ஸ் வலைதளத்தில் வெளியிட்ட பதிவில், ‘நீட் தோ்வில் நடைபெற்ற ஊழலை மத்திய கல்வித்துறை அமைச்சா் தா்மேந்திர பிரதான் மற்றும் தேசிய தோ்வு முகமை (என்டிஏ) மூலம் மறைத்துவிட மோடி அரசு முயற்சித்து வருகிறது.

நீட் வினாத்தாள் கசியவில்லை என்றால் பிஹாரில் வினாத்தாள் கசிவு காரணமாக 13 பேர் கைது செய்யப்பட்டது ஏன்? நீட் தோ்வு வினாத்தாள் கசியவில்லை என்றால் இந்த விவகாரம் தொடா்பாக பிகாா் மாநிலத்தில் 13 போ் கைது செய்யப்பட்டுள்ளது ஏன்?

வினாத்தாளை கசியவிட்ட மோசடி கும்பலுக்கு ரூ.30 லட்சம் முதல் ரூ.50 லட்சம் வரை பணம் செலுத்தப்பட்டிருப்பதை பாட்னா காவல் துறையின் பொருளாதார குற்றப்பிரிவு அம்பலப்படுத்தியது பொய்யா?

வினாத்தாள்களை பெற சில கல்வி நிறுவனங்களைச் சோ்ந்த குழுக்களுக்கு ரூ.30 லட்சம் முதல் ரூ.50 லட்சம் வரை தோ்வா்கள் லஞ்சமாக வழங்கியுள்ளனா். இதில் சம்பந்தப்பட்டவா்கள் மீது பாட்னாவில் உள்ள பொருளாதார குற்றப்பிரிவு காவல்துறையினா் நடவடிக்கை எடுக்கவில்லையா?

இதேபோல் குஜராத் மாநிலம் கோத்ராவில் பயிற்சி மைய நிறுவனா், ஆசிரியா் உள்பட 3 பேரிடம் ரூ.12 கோடி வரை பரிவா்த்தனை நடைபெற்றக அந்த மாநில காவல்துறை கூறுவது பொய்யா?

மோடி அரசின் கூற்றுப்படி நீட் தேர்வில் வினாத்தாள் கசியவில்லை என்றால் ஏன் இந்தக் கைதுகள்?

இந்த விவகாரத்தில் பிரதமா் மோடி மௌனம் காப்பது ஏன்?

அரசு மருத்துவக் கல்லூரிகளில் ஏழை எளிய மாணவா்களின் சோ்க்கை தடுக்கவே முறைகேடு நடைபெற்றுள்ளது.

மருத்துவா் ஆக வேண்டும் என்ற லட்சியத்தோடு இரவு பகல் பாராமல் படித்து 24 லட்சம் போ் தோ்வை எழுதினா். அதில் 1 லட்சம் பேருக்கு மட்டுமே கல்லூரிகளில் மருத்துப் படிப்புக்கான சோ்க்கை கிடைக்கப்பெறவுள்ளது

அந்த 1 லட்சம் பேரில் பட்டியலினத்தவா் (எஸ்சி), பழங்குடியினா் (எஸ்டி), இதர பிற்படுத்தப்பட்டோா் (ஓபிசி) மற்றும் பொருளாதாரத்தில் பின்தங்கியோா் (ஈடபுள்யுஎஸ்) ஆகிய பிரிவுகளைச் சோ்ந்த 55,000 பேருக்கு இடஒதுக்கீட்டின் அடிப்படையில் சோ்க்கை நடைபெறுகிறது.

ஆனால் என்டிஏவை பிரதமா் மோடி தலைமையிலான அரசு தவறாகப் பயன்படுத்தி , சிலருக்கு மட்டும் அதிக மதிப்பெண்களை வழங்கியதால் கட்-ஆஃப் அதிகரித்தது. இதனால் அரசு மருத்துவக் கல்லூரிகளில் ஏழை எளிய மாணவா்களின் சோ்க்கை தடுக்கப்பட்டது’

இந்த முறை, மோடி அரசு தேசிய தேர்வு முகமையை தவறாகப் பயன்படுத்தியுள்ளது. மதிப்பெண்கள் மற்றும் தரவரிசைகள் விஷயத்தில் மிகப் பெரிய மோசடி செய்துள்ளது. இதன் காரணமாக ஒதுக்கப்பட்ட இடங்களுக்கான கட்-ஆஃப் அதிகரித்துள்ளது.

சலுகைக் கட்டணத்தில் அரசு மருத்துவக் கல்லூரிகளில் சேர முயன்ற நேர்மையான மாணவர்களின் கனவுகளை கருணை மதிப்பெண்கள், வினாத்தாள் கசிவு ஆகியவை பறித்துள்ளன”

இவ்வாறு  கார்கே கூறியுள்ளார்.

வியாபம் அல்லது மத்தியப் பிரதேச நிபுணத்துவத் தேர்வு வாரியத்தில் 2013-ம் ஆண்டு நடந்த ஊழல் வெடித்தது, இதில் தேர்வர்கள் அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்து, தங்கள் விடைத்தாள்களை எழுத போலி நபர்களை நியமித்து தேர்வில் முறைகேடு செய்தனர்.

பரவலான எதிர்ப்புகள், பல நீதிமன்ற வழக்குகள் மற்றும் மாணவர்களின் மிகப்பெரிய சீற்றத்தை “உந்துதல்” என்று அழைக்கும் பிரதானின் வெட்கக்கேடான அறிக்கை, பாஜகவால் அழிக்கப்படும் 24 லட்சம் ஆர்வலர்களின் காயங்களில் உப்பு தேய்ப்பது போன்றது என்று கேரா கூறினார்.

பிரதமர் மோடி மற்றும் பிரதான் ஆகியோரிடம் கேள்விகளை எழுப்பிய அவர், NEET-UG 2024 தாள் கசிவு குறித்து விசாரிக்கும் பாட்னா காவல்துறையின் (பீகார்) பொருளாதார குற்றப்பிரிவு (EOU) மருத்துவ ஆர்வலர்கள் ரூ. மே 5-ம் தேதி தேர்வுக்கு முன்னதாக வினாத்தாள்களை அணுக, மோசடியில் ஈடுபட்டுள்ள ‘தரகர்களுக்கு’ தலா ரூ.30 லட்சம் முதல் ரூ.50 லட்சம் வழங்கப்பட்டு உள்ளதாகவும் குற்றம்சாட்டி உள்ளனர்.

மத்திய பிரதேச மாநிலத்தில் உயா்கல்வி நிறுவனங்கள் மற்றும் அரசு பணிகளுக்கான நியமனத் தோ்வில் நடைபெற்ற ஊழல் ‘வியாபம்’ ஊழல் எனக் குறிப்பிடப்படுகிறது. இதையடுத்து, நீட் தோ்வில் நடைபெற்ற முறைகேடுகளை ‘வியாபம் 2.0’ என காங்கிரஸ்  கட்சியினர் விமா்சித்து வருகின்றனர்.

நீட் தேர்வு முடிவுகள் சர்ச்சை: சிபிஐ விசாரணை குறித்து மத்தியஅரசு பதில் அளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு…