அகமதி
தெற்கு குவைத் பகுதியில் உள்ள அடுக்கு மாடி குடியிருப்பில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 41 பேர் மரணம் அடைந்துள்ளனர்.

குவைத்தின் தெற்கு பகுதியில் அகமதி மாகாணம் உள்ளது. அகாதி மாகாணத்தின் மங்கப் பகுதியில் 6 மாடிகளை கொண்ட அடுக்குமாடி குடியிருப்பு உள்ளது. இங்கு 150க்கும் மேற்பட்டோர் வசித்து வந்தனர்.
இந்த அடுக்குமாடி குடியிருப்பில் இன்று அதிகாலை பயங்கர தீ விபத்து ஏற்பட்டு தீ மளமளவென அடுக்குமாடி குடியிருப்பின் பல்வேறு பகுதிகளுக்கும் பரவியது. அப்போது அதிகாலை என்பதால் அனைவரும் உறங்கிக்கொண்டிருந்தனர்.
விபத்து குறித்து தகவலறிந்த தீயணைப்புத்துறையினர் விரைந்து வந்து குடியிருப்பில் பற்றி எரிந்த தீயை அணைத்தனர். ஆயினும் இந்த தீ விபத்தில் 41 பேர் உயிரிழந்தனர். மரணம் அடைந்தோரில் சுமார் 10 பேர் இந்தியர்கள எனத் தெரிய வந்துள்ளது.
[youtube-feed feed=1]