சென்னை: விளவங்கோடு  சட்டப்பேரவை  இடைத்தேர்தலில் வெற்றிபெற்ற காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் தாரகை கத்பர்ட்  முதலமைச்சர் ஸ்டாலின் முன்னிலையில், தமிழ்நாடு சட்டப்பேரவையின் எம்எல்ஏவாக பதவி ஏற்றுக்கொண்டார். அவருக்கு சபாநாயகர் அப்பாவு பதவி பிரமாணம் செய்து வைத்தார்.

கடந்த 2021ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில், விளவங்கோடு  சட்டப்பேரவையில் காங்கிரஸ் கட்சி வேட்பாளராக போட்டியிட்டு வெற்றி பெற்றவர் விஜயதாரணி. இவருக்கும் கட்சி தலைமைக்கும் இடையே மோதல் போக்கு நீடித்த நிலையில், அவர் பாஜகவுக்கு மாறினார். தொடர்ந்து தனது  சட்டப்பேரவை உறுப்பினர்  பதவியை ராஜினாமா செய்தார்.   இதையடுத்து, விளங்கோடு சட்டப்பேரவை தொகுதிக்கு, மகக்ளவை தேர்தலுடன் இடைத்தேர்தலும் நடத்தப்பட்டது. இதில்,   காங்கிரஸ் கட்சி சார்பில் தாரகை கத்பர்ட் போட்டியிட்டார். இவர் எதிர்க்கட்சி வேட்பாளரை விட, 91 ஆயிரத்து 54 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்.

இந்த நிலையில் காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் தாரகை கத்பர்ட் இன்று எம்எல்ஏவாக பதவி ஏற்றுக்கொண்டார். சட்டப்பேரவை செயலகத்தில் உள்ள  சபாநாயகர் அப்பாவு அறையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில்   சட்டமன்ற உறுப்பினராக பதவியேற்றுக்கொண்டார்.

இந்த நிகழ்ச்சியில், முதலமைச்சர் ஸ்டாலின்,  காங்கிரஸ் தலைவர் செல்வபெருந்தகை உள்பட பலர் கலந்துகொண்டனர்.