சென்னை: தமிழ்நாட்டில், கூட்டுறவு நிறுவனங்கள் மூலம் வழங்கப்பட்டு வந்த கல்விக்கடன் ₹1 லட்சத்தில் இருந்து ₹5 லட்சமாக உயர்த்தப்படுவதாக கூட்டுறவுத்துறை அமைச்சர் பெரியகருப்பன் அறிவித்து உள்ளார்.

தமிழ்நாட்டில் திமுக அரசு மாணவர்களின் கல்விக்காக பல்வேறு உதவிகளை செய்து வருகிறது. அதன் தொடர்ச்சியாக கூட்டுறவு நிறுவனங்கள் மூலம் வழங்கப்பட்டு வந்த கல்விக்கடன் ₹1 லட்சத்தில் இருந்து ₹5 லட்சமாக உயர்த்தி அறிவிக்கப்பட்டு உள்ளது.

நாடு முழுவதும் ஏழை எளிய மக்கள் உள்பட அனைவரும் கல்வி அறிவு பெற மத்திய மாநில அரசுகள் பல்வேறு சலுகைகளை வழங்கி வருகின்றன. மேலும், விரிவான கல்விக் கடன்கள் மூலம் மாணவர்களின் கல்வி அபிலாஷைகளை ஆதரிப்பதில் முன்னணி இந்திய வங்கிகள் முக்கிய பங்கு வகிக்கின்றன. உள்நாட்டு மற்றும் சர்வதேச உயர்கல்விக்காக வடிவமைக்கப்பட்ட இந்தக் கடன்கள், கவர்ச்சிகரமான 8 .10% வட்டி விகிதத்தில் தொடங்கி 20 ஆண்டுகள் வரை தாராளமாக திருப்பிச் செலுத்தும் காலத்தை வழங்குகின்றன.

அதன்படி, இடைநிலைக் கல்விக்குப் பிறகு உயர் கல்விக்கான இளங்கலைக் கல்விக் கடன், இளங்கலைப் படிப்புகளை முடித்த பிறகு படிப்புகளைத் தொடர முதுகலை கல்விக் கடன்
படிப்புகள், பயிற்சிகள் அல்லது சான்றிதழுக்கான தொழில் வளர்ச்சிக்கான கல்விக் கடன்கள், பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்கு கல்விக் கடன் பெறுகிறார்கள். மேலும்,  கல்விக் கடன்கள், கல்விக் கட்டணம், விடுதிக் கட்டணங்கள், பயணச் செலவுகள் உள்பட  பரந்த அளவிலான செலவினங்களை உள்ளடக்கிய நிதி ஆதாரமாகச் செயல்படுகின்றன. மேலும்,   கல்வி கடன்களுக்கு, வருமான வரிச் சட்டத்தின் பிரிவு 80E இன் கீழ் வரிச் சலுகைகள் செலுத்தப்பட்ட வட்டிக்கு விலக்குகள் மூலம் நிவாரணம் அளிக்கின்றன.

இந்த நிலையில், தற்போது தமிழ்நாட்டில், கூட்டுறவு நிறுவனங்கள் மூலம் வழங்கப்பட்டு வந்த கல்விக்கடன் ₹1 லட்சத்தில் இருந்து ₹5 லட்சமாக உயர்த்தப்படுவதாக கூட்டுறவுத்துறை அமைச்சர் பெரியகருப்பன் அறிவித்து உள்ளார்.

உயர் கல்வி பயில மாணவர்களின் குடும்ப வருமானம் ஒரு தடையாக இருக்கக்கூடாது என்ற நோக்கிலும், குழந்தை தொழிலாளர் முறையை ஒழித்திடுவோம். அவர்களின் வாழ்வில் கல்வி தீபம் ஏற்றிடுவோம் குழந்தை தொழிலாளர் இல்லாத எதிர்காலம். அதுவே, தமிழ்நாட்டின் பொற்காலம் என்று முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்து உள்ளார்.

இதுகுறித்து தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில், கூட்டுறவு நிறுவனங்கள் மூலம் வழங்கப்பட்டு வந்த கல்விக் கடன் ரூ.1 லட்சத்திலிருந்து ரூ.5 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளதாகவும்,  முதலாமாண்டு மாணவர்கள் மட்டுமல்லாது 2-ம் ஆண்டு, 3-ம் ஆண்டு மாணவர்களும் கல்விக் கடன் வாங்கலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், புத்தகக் கட்டணம், விடுதிக் கட்டணம், உணவுக்கான கட்டணம், டியூஷன் கட்டணம் ஆகியவற்றைச் செலுத்த ஏதுவாக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார். தலைமை கூட்டுறவு வங்கி, மத்திய கூட்டுறவு வங்கி, தொடக்க வேளாண்மை கூட்டுறவு நிறுவனங்கள் உள்ளிட்ட நிறுவனங்களை அணுகி, உரிய ஆவணங்களைப் பெற்று இந்த கடனைப் பெறலாம் என்றுமை,  மாணவர்கள் படிப்பை முடித்து, 6 மாத காலம் முதல் 5 வருடங்களுக்குள் கடனைத் திருப்பிச் செலுத்த வேண்டும். இதற்கு அதிகபட்சமாக 10 சதவீதம் வரை வட்டி விதிக்கப்படும் என்றும் அதில் கூறப்பட்டுள்ளது.

பள்ளிக் குழந்தைகள் மத்திய, மாநில அரசுகளின் கல்வி உதவித் தொகைகள் பெற தமிழ்நாடு அரசு சிறப்பு ஏற்பாடு – முழு விவரம்…