சென்னை
பிரபல நடிகர் பிரபாஸ் நடித்துள்ள கல்கி 2898 ஏடி படத்தின் டிரெய்லர் வெளியாகி உள்ளது.
நடிகர் பிரபாஸ். பாகுபலி மற்றும் பாகுபலி 2 படங்களின் வெற்றியை தொடர்ந்து பெரிய நடிகராக உயர்ந்தார். பிறகு இவரது நடிப்பில் வெளியான சாஹோ, ராதே ஷியாம். ஆதிபுருஷ் போன்ற படங்கள் பெரிய தோல்வியை சந்தித்தன.
தற்போது நாக் அஸ்வின் இயக்கத்தில் ரூ.600 கோடி பட்ஜெட்டில் ‘கல்கி 2898 ஏ.டி’ படத்தில் பிரபாஸ் நடித்து வருகிறார். இந்த அறிவியல் சார்ந்த கதைக்களத்தில் தயாராகும் படத்தில் நடிகர் கமல்ஹாசன் வில்லனாக நடிக்கிறார். படத்துக்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார்.
இந்த படத்தின் டிரெய்லர் நேற்று மாலை அனைத்து மொழிகளிலும் வெளியாகியுள்ளது.
இந்த படத்தின் இயக்குநர் நாக் அஸ்வின்,
“மகாபாரதக் காலக்கட்டத்தில் தொடங்கும் இந்தக் கதை அதன் பிறகு 6000 ஆண்டுகள் நடக்கும் விஷயங்களைப் பேசுகிறது. அந்த உலகம் எப்படி இருக்கும் என்பதை கற்பனையாக உருவாக்க முயன்றுள்ளோம். இதை முடிந்த வரை இந்திய பின்னணியிலேயே உருவாக்கியுள்ளோம்”
என்று தெரிவித்துள்ளார்.
இந்த படத்தில் நடிகர் பிரபாஸ் உடன் புஜ்ஜி என்ற காரும் பயணம் செய்வதாக படக்குழு அறிவித்துள்ளது. வரும்ம் 27ஆம் தேதி வெளியாகும் இந்தப் படத்தின் டிரெய்லர் தற்போது தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம் மற்றும் கன்னடம் ஆகிய மொழிகளில் வெளியாகியுள்ளது.