பிரதமர் மோடி தலைமையிலான அமைச்சர்கள் கூட்டம் இன்று மாலை பிரதமரின் இல்லத்தில் நடைபெற்றது.

கூட்டத்தை தொடர்ந்து புதிதாக பொறுப்பேற்றிருக்கும் அமைச்சர்களின் இலாக்கா விவரங்கள் வெளியானது.

ராஜ்நாத் சிங், அமித் ஷா, நிதின் கட்கரி, நிர்மலா சீதாராமன், ஜெய்சங்கர் ஆகியோர் முறையே தாங்கள் ஏற்கனவே வகித்த பாதுகாப்பு, உள்துறை, நெடுஞ்சாலை மற்றும் சாலை போக்குவரத்து, நிதி, வெளியுறவு ஆகிய துறைகளுக்கு மீண்டும் அமைச்சர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

ஜெ.பி. நட்டா – சுகாதாரம், குடும்பநலத்துறை மற்றும் ரசாயனம் மற்றும் உரத்துறை

சிவராஜ் சிங் சௌகான் – விவசாயம், விவசாயிகள் நலன் மற்றும் கிராமப்புற வளர்ச்சி

மனோகர்லால் கட்டார் – வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் மற்றும் மின்துறை

எச்.டி. குமாரசாமி – கனரக தொழில்கள் மற்றும் எஃகு

பியூஸ் கோயல் – வர்த்தகம் மற்றும் தொழில்

தர்மேந்திர பிரதான் – கல்வி

ஜித்தன் ராம் மாஞ்சி – சிறு குறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள்

ராஜிவ் ரஞ்சன் சிங் – பஞ்சாயத் ராஜ், மீன்வளம், கால்நடை மற்றும் பால்வளத்துறை

சர்பனந்தா சோனோவால் – துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் நீர்வழி

வீரேந்திர குமார் – சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல்

ராம் மோகன் நாயுடு – விமானப் போக்குவரத்துத் துறை

ப்ரகலாத் ஜோஷி – நுகர்வோர் விவகாரம், உணவு மற்றும் பொது விநியோகம், மற்றும் புதிய மற்றும் புதுப்பிக்கத் கூடிய எரிசக்தி

ஜுவல் ஓரம் – பழங்குடியினர் விவகாரம்

கிரிராஜ் சிங் – ஜவுளித்துறை

அஸ்வினி வைஷ்ணவ் – ரயில்வே, தகவல் மற்றும் ஒளிபரப்பு மற்றும் மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பம்

ஜோதிராதித்ய சிந்தியா – தகவல் தொடர்பு மற்றும் வடகிழக்கு பிராந்திய வளர்ச்சி

பூபேந்தர் யாதவ் – சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவநிலை மாற்றம்

கஜேந்திர சிங் ஷெகாவத் – கலாச்சார அமைச்சர், மற்றும் சுற்றுலா

அன்னபூர்ணா தேவி – பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாடு

கிரண் ரிஜிஜு – பாராளுமன்ற விவகாரம்; மற்றும் சிறுபான்மை விவகாரம்

ஹர்தீப் சிங் பூரி – பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு

டாக்டர். மன்சுக் மாண்டவியா – தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு மற்றும் இளைஞர் விவகாரங்கள் மற்றும் விளையாட்டுத் துறை

ஜி. கிஷன் ரெட்டி – நிலக்கரி அமைச்சர்; மற்றும் சுரங்கத்துறை

சிராக் பாஸ்வான் – உணவு பதப்படுத்தும் தொழில்துறை

சிஆர் பாட்டீல் – ஜல் சக்தி

இணை அமைச்சர்கள் (தனி பொறுப்பு)

எல். ராவ் இந்தர்ஜித் சிங் – புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்க அமைச்சகத்தின் மாநில அமைச்சர் (தனி பொறுப்பு); மற்றும் திட்டமிடல் அமைச்சகத்தின் மாநில அமைச்சர் (தனி பொறுப்பு) மற்றும் கலாச்சாரத்துறை

டாக்டர் ஜிதேந்திர சிங் – அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சகம் மற்றும் புவி அறிவியல் அமைச்சகம்

அர்ஜுன் ராம் மேக்வால் – பிரதமர் அலுவலகம்; பணியாளர்கள், பொதுமக்கள் குறைகள் மற்றும் ஓய்வூதியங்கள் அமைச்சகம்; அணுசக்தித் துறை; மற்றும் விண்வெளி துறை

ஜாதவ் பிரதாப்ராவ் கணபத்ராவ் – சட்டம் மற்றும் நீதித்துறை மற்றும் பாராளுமன்ற விவகார அமைச்சகம்

ஜெயந்த் சவுத்ரி – ஆயுஷ் அமைச்சகம்; மற்றும் சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகம்; திறன் மேம்பாடு மற்றும் தொழில்முனைவோர் அமைச்சகம் மற்றும் கல்வி அமைச்சகம்

தவிர, இணை அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ள தமிழகத்தைச் சேர்ந்த எல். முருகனுக்கு தகவல் மற்றும் ஒளிபரப்பு மற்றும் பாராளுமன்ற விவகாரங்கள் துறை ஒதுக்கப்பட்டுள்ளது.