பெங்களூரு

பாலியல் வழக்கில் கைதான பிரிஜ்வல் ரேவண்ணாவுக்கு 14 நாட்கள் நீதிமன்றக் காவல் வழங்கப்பட்டுள்ளது.

கர்நாடகாவில் உள்ள ஹாசன் தொகுதியின் மதசார்பற்ற ஜனதாதளம் கட்சியின் முன்னாள் எம்.பி.யாக இருந்த பிரஜ்வல் ரேவண்ணா முன்னாள் அமைச்சர் எச்.டி.ரேவண்ணாவின் மகன் ஆவர். தேர்தல் நடைபெறுவதற்கு சில நாட்களுக்கு முன்பு பிரஜ்வல் ரேவண்ணாவின் ஆபாச வீடியோக்கள் வெளியானதையடுத்து அவர் ஜெர்மனிக்கு தப்பி சென்றார்.

எனவே பிரஜ்வலை சிறப்பு விசாரணை குழு அதிகாரிகள் தேடிவந்த நிலையில் கடந்த 31 ஆம் தேதி பெங்களூருவுக்கு வந்து போலீசாரிடம் சரண் அடைவதாக வீடியோ மூலம் அவர் அறிவித்தார். கடந்த 31 ஆம் தேதி அதிகாலை ஜெர்மனியில் இருந்து பெங்களூரு வந்த போது பிரஜ்வல் ரேவண்ணா கைது செய்யப்பட்டார்.

காவல்துறையினர் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி 6 நாட்கள் காவலில் எடுத்து விசாரணை நடத்தினர். பிறக் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி மேலும் 4 நாட்கள் அவருக்கு காவல்துறையினர் காவலில் வைத்து விசாரிக்க அனுமதி வழங்கப்பட்டது.

இன்றுடன் பிரஜ்வல் ரேவண்ணாவின் காவல் முடிவடைந்தது அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில், அவரை 14 நாட்கள் (வரும் 24ம் தேதி வரை) நீதிமன்ற காவலில் வைக்க பெங்களூரு செஷன்ஸ் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Brijwal Revanna, 14 days, Judicial custody,