வாஷிங்டன்

மெரிக்க அதிபர் ஜோ பைடன் தன் மகன் மீதான குற்றம் நிரூபிக்கப்பாட்டால அவருக்கு மன்னிப்பு வழங்கப்பட மாட்டாது என தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவில் பொதுமக்கள் துப்பாக்கி வைத்துக்கொள்வதற்கு அனுமதி இருந்தாலும், பாதுகாப்பு காரணங்களுக்காக குற்ற வழக்குகளில் தொடர்புடையவர்கள்,  போதைப் பொருள் பயன்படுத்தும் பழக்கம் இருப்பவர்களால் அதை வாங்க முடியாது.

தற்போதைய அமெரிக்க அதிபர் ஜோ பைடனின்  மூத்த மகன் ஹண்டர் பைடன் சட்டவிரோதமாக துப்பாக்கி வாங்கியதாக குற்றம் சாட்டப்பட்டு வழக்கு நீதிமன்றத்தில் நடைபெற்று  வருகிறது.

துப்பாக்கி வாங்குவதற்கான படிவத்தில் ‘போதைப் பொருள் பழக்கம் கிடையாது’ என்று ஹன்டர் பைடன் பொய்யாகக் கூறியதாக அவர் மீது கடந்த சில நாள்களாக வழக்கு நடைபெற்றுவருகிறது.

அமெரிக்காவில் அதிகம் பேசப்பட்டு வரும்இண்ட வழக்கில், தாது குற்றவாளி என உறுதிசெய்யப்பட்டால் அவரை மன்னிக்கப் போவதில்லை என்று ஜோ பைடன் அதிரடியாக அறிவித்துள்ளார்.

தாம் அதிபராக இருந்தாலும் ஒரு தந்தையாக,  எனது மகன் மீது அளவு கடந்த அன்பு வைத்துள்ளதாகவும் அவர் குடும்பம் நிறைய கஷ்டங்களை சந்தித்துள்ளதாகவும் ஒரு தந்தையாக தமது மகனுக்கு எப்போதும் பக்கத்துணையாக நிற்பேன் என்று தெரிவித்துள்ளார்.