டெல்லி: வாடகைக்கு இருந்த வீட்டை  சொந்த வீடு என கூறி ராணுவ மேஜரிடம் ரூ.1 கோடி மோசடி செய்தது தொடர்பாக  மோசடி மன்னனான சென்னை பாஜக பிரமுகர் நாகராஜ்  சாகர் என்பவர் கால்துறையினரால்  கைது செய்யப்பட்டு உள்ளார்.

டெல்லியில், தான் வாடகைக்கு இருந்த வீட்டை தனது சொந்த வீடு என கூறி ராணுவ மேஜரிடம் ₹1 கோடி மோசடி செய்ததாக பதிவு செய்யப்பட்ட வழக்கில், தமிழ்நாட்டை சேர்ந்த பிரபல மோசடி மன்னனும், பாஜக பிரமுகருமான நாகராஜ் சாகரை ஐம்மு காஷ்மீர் போலீசார் கைது செய்துள்ளனர்.

அண்ணாமலைபுரம் போட் கிளப் பகுதியை சேர்ந்த பாஜக நிர்வாகி நாகராஜ் (வயது 35) என்பவர் தனக்கு பாஜகவில் உள்ள தலைவர்கள் மிகவும் நெருக்கம் எனக்கூறி பல்வேறு இடங்களில் பல்வேறு மோசடிகளை அரங்கேற்றி உள்ளார். குடியரசு தலைவர் திரெளபதி முர்மு, பிரதமர் மோடி, மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் உள்பட பாஜக முக்கிய நிர்வாகிகளுடன் இருப்போது போன்றை  போட்டோக்களை தனது வீட்டில் மாட்டி வைத்து, தன்னை சந்திக்க வருபவர்களிடம் அந்த போட்டோக்களை காட்டி பல்வேறு மோசடி வேலைகளில் ஈடுபட்டு வந்துள்ளார்.

இவர்மீது பல வழக்குகள் உள்ளது. கடந்த 2019ம் ஆண்டு முதன்முதலாக மோசடி வழக்கில் அடையாறு சாஸ்திரி நகர் போலீசாரால் கைது செய்யப்பட்டார்.  அடையாறு பகுதியைச் சேர்ந்த முகமது நூறுதீன் என்பவருக்கு தொழில் செய்வதற்காக ரூபாய் 75 கோடி வங்கியிலிருந்து லோன் வாங்கி தருவதாக பத்திர பதிவிற்கு 6.5 லட்சமும், 60 லட்சம் ரூபாய் ஸ்டாம்ப் பேப்பர், 22 லட்சம் டைமண்ட் நகைகள் என மொத்தம் 92 லட்ச ரூபாயை கடந்த 2019 ம் ஆண்டு பெற்று மோசடி செய்த வழக்கில்  கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

பின்னர் ஜாமினில் வெளியே வந்தவர் தொடர்ந்து மோசடிகளில் ஈடுப்பட்டு வந்தார். இதனால் அவர்கமீது பல வழக்குகள் உள்ளன. இந்த நிலையில்,  டெல்லியில், தான் வாடகைக்கு இருந்த வீட்டை தனது சொந்த வீடு என கூறி ராணுவ மேஜரிடம் ₹1 கோடி மோசடி  செய்துள்ளது தெரிய வந்துள்ளது. இதுதொடர்பாக மேஜர் கொடுத்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த  ஜம்மு காஷ்மீர் போலீசால், தமிழ்நாட்டை சேர்ந்த பிரபல மோசடி மன்னனும், பாஜக பிரமுகருமான நாகராஜ் சாகரை கைது செய்தனர்.

நாகராஜ் 2017ஆம் ஆண்டு ஈசிஆர் பகுதியில் ஃபெவினா என்ற பெண்ணுக்கு வீடு வாங்கி தருவதாக கூறி மோசடி செய்த வழக்கில் மத்திய குற்றப்பிரிவு போலீசாரால் கைது செய்யப்பட்டதும் போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்த மோசடி சம்பவத்திற்கு உடந்தையாக இருந்த நாகராஜின் தந்தை விஷ்னு சாகர் (73), சகோதரி பூர்ணிமா(40) ஆகியோர் மீதும் கடந்த ஆண்டு சாஸ்திரிநகர் போலீசார் மோசடி, நம்பிக்கை மோசடி உட்பட 3 பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளது.

நாகராஜ்  சாகர் கடந்த 2016ஆம் ஆண்டு ராணிப்பேட்டை தொகுதியில் பாஜக சார்பில் வேட்பாளராக நின்று படுதோல்வி அடைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.