ஜெகன்மோகன் ரெட்டி வீழ்ந்தது எப்படி…..
நெட்டிசன்
அரசியல் ஆர்வலர் கே.எஸ்.ராதாகிருஷ்ணன் முகநூல் பதிவு…
கடந்த ஐந்து வருடத்தில் ஆந்திராவில் மகளீர் உரிமைத் தொகை என்று 50 லட்சம் பெண்களுக்கு வருடம் தோறும் 15000 வீதம் கொடுத்துள்ளார்..
ஆனாலும் எப்படி ஆந்திரா மக்களால் வீழ்த்தப்பட்டார்…..
இப்படித்தான்…
*பத்திரப்பதிவு உயர்வு..*
*தண்ணீர் விலை உயர்வு….*
*பஸ் கட்டண உயர்வு…*
*பால்விலை உயர்வு* என்று சாமனிய மக்களுக்கு வயிற்றில் அடித்தது….
*வீதிக்கு வீதி கஞ்சா,உயர்ரக போதை விற்பனை…*
*அரசைப் பற்றியோ,அமைச்சர்களைப் பற்றியோ,முதல்வரைப் பற்றியோ விமர்சனம் செய்தால் உடனடியாக அவதூறு வழக்கில் மூன்று மாதங்களுக்கு மேலாக சிறை.*
*உட்சபட்சமாக 50 நாட்களுக்கும் மேலாக சந்திரபாபு நாயுடு அவர்களை பொய்வழக்கில் கைது செய்து சிறையில் வைத்தது…*
சிறையில் இருந்து வெளியே வந்து சட்டமன்றத்தில் கண்கலங்கி பேசியபோது,*வயது ஆகிருச்சு புத்தி இருக்கா என ஜெகன்மோகன் ரெட்டியின் ஏளனப் பேச்சு.*
*நாயுடுவின் மனைவியைப் பற்றிய அருவருக்கத்தக்க ஆபாச பேச்சு என ஜெகன் மோகன் ரெட்டி செய்யாத அலம்பல்களே இல்லை…
அதில் அவரது கட்சிக்காரர்கள் இணைய தளத்தில் எதிர்கட்சி உறுப்பினர்களை,அவரது குடும்ப பெண்களை ஆபாசமாக எழுதியதற்கு அளவே இல்லை….
உட்சபட்சமாக ஆந்திர மக்களின் வரிப்பணத்தில் அவரது அப்பா ராஜசேகர் ரெட்டிக்கு YSR பேருந்து நிலையம்,YSR புத்தக நிலையம்,YSR கல்லூரி,YSR பூங்கா,YSR கடற்கரை,YSR சாலை,YSR தெரு,YSR கழிவறை என எங்குப்பார்த்தாலும் அப்பா பெயரில் ஒரு விளம்பரம்.
ஆந்திரா எங்கும் YSR க்கு 600 சிலைகள் என்று ஆணவத்தின் உச்சத்தில் ஆடினார் ஜெகன் மோகன் ரெட்டி…*
இன்று YSR சிலைகள் உடைத்து எறியப்படுகின்றன. YSR பெயர் பலகைகள் பெயர்த்து எறியப்படுகின்றன.
சந்திரபாபு நாயுடு 164 இடங்களில் வென்று மத்திய அரசையே வழி நடத்தக் கூடிய இடத்தில் இருக்கின்றார்.ஜெகன்மோகன் ரெட்டி எனக்கு வீட்டைவிட்டு வெளியே வர அச்சமாக இருக்கிறது என அறிக்கை விட்டுள்ளார்…
கடந்த முறை ஜெகன்மோகன் ரெட்டிக்கு 151 இடங்களைத் தந்த ஆந்திர மக்கள் இந்த முறை 17 இடங்களைத் தந்து எதிர்க்கட்சி அந்தஸ்து கூட உனக்கு இல்லை என்று அடித்து விரட்டி உள்ளனர்.
ஆட்சி அதிகாரம் கிடைத்துள்ளது என்று ஆடினால் ஒருநாள் அத்தனையும் வீழ்த்தப்படும் என்பதை ஜெகன் இன்று உணர்ந்துள்ளார்.அன்று சிலைகளை பாதுகாத்த காவல்துறை இன்று சிலைகளை உடைப்பது யாரென்று தெரியவில்லை என்று கைவிரிக்கும் நிலையில் உள்ளனர்…
சந்திரபாபு நாயுடுவுக்கு தேர்தல் வேலை செய்வதற்கு என்றே சொந்தப்பணத்தில் 50 ஆயிரத்திற்கும் மேலாக வெளிநாட்டில் வேலை பார்த்து வந்த ஆந்திர மாநில ஐடி ஊழியர்கள் தேர்தல் பணி செய்தனர்..
ஆனால் ஜெகன்மோகன் ரெட்டி ஆட்சியில் கள்ளச்சரக்கு விற்றவன்,கஞ்சா விற்றவன்,போதை பொருட்கள் விற்றவன் என ஒருத்தனும் வீதிக்கு வந்து மக்களை சந்திக்க இயலவில்லை…
இந்த நேரத்தில் கேப்டன் அவர்களின் பாடல் வரி நினைவுக்கு வருகிறது..
*கொடுத்தாலும் கொடுத்தான்டா*
*நல்ல எடம் பாத்து கொடுத்தாண்டா*
*ஊரில் ஊழல்கள் செய்வோருக்கும்*
*ஒண்ண பத்தாகச் சொல்வோருக்கும்*
*கொடுத்தாலும் கொடுத்தான்டா*
*நல்ல எடம் பாத்து கொடுத்தான்டா…..*
*ஜனநாயக நாட்டில் எல்லோரும் இந்நாட்டு மன்னர்* என்று உணர்ந்து செயல்பட்டு அவர்களுக்கு உரிய மரியாதை தந்தால் மட்டுமே அரசியலில் நீடித்து நிற்க இயலும் என்பதை ஆந்திராவில் வீழ்த்தப்பட்ட ஜெகன் மோகன் ரெட்டி
அரசியல் வாழ்க்கை நமக்குச் சொல்கிறது…..