சென்னை: கடந்த சில வாரங்களாக உயர்ந்து வந்த தங்கத்தின் விலை  தடாலடியாக குறைந்து சவரன் ரூ.53,200 ஆக உள்ளது.  இது பொதுமக்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது.

இந்திய  பெண்களின் வளர்ச்சியில் தங்கம் முக்கிய பங்கு வகிக்கிறது.  இந்திய மக்களிடையே . குறிப்பாக தமிழக பெண்களிடம் தங்கத்திற்கு தனி மரியாதை உண்டு.   பெண்கள் தங்களை மற்றவர்களிடம் இருந்து வேறுபடுத்தி காட்டவும், தங்களை உயர்ந்தவர்களாக காட்டவும், தங்க அணிகலன்கள் அணிவதை வழங்கமாக கொண்டுள்ளனர். மேலும், சாமானிய மக்களின் அவசர தேவைக்கு தங்கமே பேரூதவியாக செயல்படுகிறது.  மேலும், இந்தியா உள்பட உலகம் முழுவதும் சேமிப்புக்காகவும் தங்கம் அதிக அளவில் விற்பனையாகிறது.   இதனால், தங்கத்தின் விலை வரலாறு காணாத அளவில் உயர்ந்து வருகிறத.

இந்த ஆண்டு (2024) தொடக்கம் முதலே தங்கத்தின் விலை உயர்ந்து வரும் நிலையில், கடந்த மார்ச் ஒன்றாம் தேதி தொடர்ந்து உயர்ந்து வருகிறது. 2024 பிப்ரவரி மாத இறுதியில், கிராம் தங்கம் விலை ரூ. 5,815 ரூபாய் ஆக இருந்த நிலையில்,  மார்ச் ஒன்றாம் தேதி கிராமிற்கு 25 ரூபாய் உயர்ந்து,  ஆபரணத் தங்கத்தின் விலை 5,840 ஆக இருந்தது. ஒரு சவரன் ரூ.  46,520க்கு விற்பனை செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து தங்கத்தின் விலை சிறுக சிறுக உயர்ந்து வருகிறது. புதிய உச்சமாக  மார்ச் 27-ம் தேதி ஒரு சவரன் ஆபரணத் தங்கம் 50 ஆயிரம் ரூபாயை எட்டியது. பின்னர் அது மேலும் உயர்ந்து, மே மாதத்தில் ரூ.54ஆயிரத்தை தாண்டியது. மே 29ந்தேதி அன்று சவரன் தங்கம் விலை 54,200 என்ற விலையில் விற்பனையானது.

அதன் பின்னரும் தொடர்ந்து தங்கத்தின் விலை ஏற்றம் இறக்கம் என்ற நிலையிலேயே காணப்பட்டது.

இந்த நிலையில், இன்று (ஜூன் 8ந்தேதி) தங்கத்தின் வுலை அதிரடியாக குறைந்து உள்ளது.  சென்னையில் 22 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 1, 520 குறைந்து ரூ. 53,200க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.  கிராமுக்கு ரூ.190 குறைந்து, ரூ.6650க்கு விற்பனையாகிறது.

வெள்ளி விலை நிலவரம்: (Silver Rate In Chennai)

அதேபோல், இன்று சென்னையில் வெள்ளி விலை கிராமுக்கு ரூ. 4.50 குறைந்து ரூ. 96 க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதையடுத்து ஒரு கிலோ வெள்ளியின் விலை ரூ. 96,000 க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.