துரை

பிரபல யூடியூபர் சவுக்கு சங்கரின் நீதிமன்றக் காவல் நீட்டிக்கபட்டுள்ளது.

பெண் காவலர் குறித்தும், காவல்துறை அதிகாரிகள் பற்றியும் பாலியல் தொடர்பான அவதூறு கருத்துகளை பிரபல யூடியூபர் சவுக்குசங்கர் தெரிவித்ததாக புகார்கள் எழுந்தன. எனவே கோவை காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர்.

கடந்த மாதம் 4-ந் தேதி தேனியில் தங்கி இருந்த அவர், கஞ்சா பதுக்கியதாக பழனிசெட்டிபட்டி காவல்துறையினர் மற்றொரு வழக்கை பதிவு செய்து இந்த வழக்கிலும் அவர் கைதானார். மதுரை நீதிமன்றம் கடந்த 20-ந்தேதி இந்த வழக்கில் அவரை 2 நாள் காவலில் எடுத்து போலீசார் விசாரணை நடத்த அனுமதி வழங்கியது.

அவரிடம் தேனி மாவட்ட போலீசார் பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்திய பின்னர் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். இந்த வழக்கில் அவரை நேற்று நீதிமன்ற காவலில் வைக்கும்படி ஏற்கனவே மதுரை நீதிமன்றம் ஏற்கனவே உத்தரவிட்டு இருந்தது.

இந்த வழக்கு நீதிபதி செங்கமல செல்வன் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தபோது சவுக்கு சங்கர், கோவை சிறையில் இருந்து வீடியோ கான்பரன்சிங் மூலம் ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது அவரை வருகிற 19-ந்தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்கும்படி நீதிபதி உத்தரவிட்டார்.