சென்னை: தமிழ்நாட்டில் பாஜக தலைமையிலான என்டிஏ கூட்டணியில்  பாமக, தமாகா உள்பட சில கட்சிகள்  இணைந்து போட்டியிட்ட நிலையில், பாமக மட்டும் ஒரே ஒரு இடத்தில் முன்னிலை வகித்து வருகிறது.

பாஜக தலைவர் அண்ணாமலை உள்பட பாஜக போட்டியிட்ட அனைத்து தொகுதிகளிலும் கடுமையான பின்னடைவை சந்தித்துள்ளனர். தாமரை தமிழ்நாட்டில் மலரும் என கூறி வந்த நிலையில், தாமரை மலராமல் கவிழ்ந்துள்ளது.

தமிழ்நாட்டில் இந்த முறை 4 முனை போட்டி நிலவியது.  கள 39 மக்களவை தொகுதிகளிலும் 609 சுயேச்சை வேட்பாளர்கள் உட்பட மொத்தம் 950 பேர் போட்டியிட்டனர்.  இதில் ஆளும் திமுக சார்பில் 23, அதிமுக 34, பாஜக 23, காங்கிரஸ் 9 மற்றும் பகுஜன் சமாஜ், நாம் தமிழர் கட்சி சார்பில் தலா 39, பாமக சார்பில் 10 பேர், நாடாளும் மக்கள் கட்சி சார்பில் 12 பேர் களத்தில் உள்ளனர்.,

இன்று வாக்குப்பதிவு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது. இதில், பாஜக மற்றும் பாஜக கூட்டணி கட்சிகள் பெரும் பின்னடைவை சந்தித்துள்ளனர். திமுக தலைமையிலான இண்டியான கூட்டணி 38 இடங்களில் முன்னிலையில் தொடரும் நிலையில், என்டிஏ கூட்டணியில் பாமக போட்டியிட்ட தருமபுரி தொகுதியில் மட்டும் சவுமியான அன்புமணி முன்னிலை வகித்து வருகிறார்.

கோவையில் போட்டியிட்ட பாஜக வேட்பாளர்   அண்ணாமலை, நீலகிரி தொகுதியில் போட்டியிட்ட மத்திய இணை அமைச்சர்  எல்.முருகன், முன்னாள் கவர்னர்  தமிழிசை செளந்தரராஜன் , நெல்லை நயினார் நாகேந்திரன் உள்பட அனைவரும்  தொடர்ந்து பின்னடைவை சந்தித்து வருகின்றனர்.

தேர்தல் ஆணையம் வெளியிட்ட காலை 12.30 நிலவரம் கோவை தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை போட்டியிட்ட கோவை மக்களவைத் தொகுதியில் காலை முதல் தொடர்ந்து பின்னடைவை சந்தித்து வருகிறார். திமுக – கணபதி ராஜ்குமார் – 12,841 பாஜக – அண்ணாமலை – 9,387 நீலகிரி மத்திய அமைச்சர் எல்.முருகன் போட்டியிட்ட நீலகிரி மக்களவைத் தொகுதியில் காலை முதல் தொடர்ந்து பின்னடைவை சந்தித்து வருகிறார். திமுக – ஆ.ராசா – 1,19,026 பாஜக – எல்.முருகன் – 66,161 தென் சென்னை முன்னாள் ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் போட்டியிட்ட தென் சென்னை மக்களவைத் தொகுதியில் காலை முதல் தொடர்ந்து பின்னடைவை சந்தித்து வருகிறார். திமுக – தமிழச்சி தங்கப்பாண்டியன் – 26,399 பாஜக – தமிழிசை செளந்தரராஜன் – 15,384

✦ தென் சென்னை – தமிழிசை சௌந்தரராஜன்

✦ மத்திய சென்னை – வினோஜ் பி.செல்வம்

✦ வட சென்னை – பால் கனகராஜ்

✦ நீலகிரி – எல்.முருகன்

✦ கோவை – அண்ணாமலை

✦ நெல்லை – நயினார் நாகேந்திரன்

✦ கன்னியாகுமரி – பொன்.ராதாகிருஷ்ணன்

✦ தஞ்சை – கருப்பு முருகானந்தம்

✦ சிதம்பரம் – கார்த்திகாயினி

✦ மதுரை – ராமசீனிவாசன்

✦ விருதுநகர் – ராதிகா சரத்குமார்