சென்னை:  தமிழகத்தில் இந்தியா கூட்டணி 38 தொகுதிகளில் முன்னிலை வகித்து வருவதால், திமுக தலைமையகமான  அண்ணா அறிவாலயத்தில் கட்சி தொண்டர்கள் கொண்டாடி வருகின்றனர்.

18வது மக்களவை தேர்தல் வாக்கு எண்ணிக்கை நாடு முழுவதும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. 543 நாடாளுமன்றத் தொகுதிகளில் 542 தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்களின் தலைவிதி இன்று தீர்மானிக்கப்படுகிறது. முதலில் தபால் ஓட்டு எண்ணிக்கை தொடங்கிய நிலையில், தொடர்ந்து இவிஎம் வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன. நாடாளுமன்ற தேர்தலுடன்  ஆந்திரப் பிரதேசம், ஒடிசா மாநில சட்டப்பேரவைத் தேர்தல்கள் மற்றும் சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கையும் நடைபெற்று வருகிறது.

தமிழ்நாட்டில் திமுக கூட்டணி அனைத்து தொகுதிகளிலும் வெற்றிபெறும் சூழல் ஏற்பட்டுள்ளது. வடசென்னை, மத்திய சென்னை மற்றும் தென் சென்னை தொகுதிகளில் திமுக தொடர்ந்து முன்னிலை வடசென்னை தொகுதியில் கலாநிதி வீராசாமி 35,087 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை மத்திய சென்னை தொகுதியில் 25,581 வாக்கு வித்தியாசத்தில் தயாநிதி மாறன் முன்னிலை தென்சென்னையில் 27,177 வாக்குகள் பெற்று தமிழச்சி தங்கப்பாண்டியன் முன்னிலையில்உ ள்ளனர்.

இதையடுத்து, சென்னையில் உள்ள   அண்ணா அறிவாலயத்தில் திமுக தொண்டர்கள் பட்டாசு வெடித்து  ஆட்டம் பாட்டத்துடன் கொண்டாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். பல பகுதிகளில் திமுக தொண்டர்கள் பட்டாசு வெடித்தும், இனிப்புகள் வழங்கியும்  வருகின்றனர்.