சென்னை: நாடாளுமன்ற தேர்தலில் தமிழ்நாட்டில் உள்ள 38 தொகுதிகளில் முன்னிலையில் உள்ளது. தேசிய ஜனநாயக கூட்டணியில் உள்ள பாமக மட்டும் ஒரே ஒரு இடத்தில் முன்னிலை வகித்து வருகிறது. பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பின்னடைவை சந்தித்துள்ளார்.
தருமபுரி தொகுதியில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் போட்டியிட்டி பாமக வேட்பாளர் சவுமியான அன்புமணி முன்னணியில் உள்ளார். இவர் 45ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாக்குகள் வாங்கி முன்னணியில் இருக்கிறார். இவரைத் தொடர்ந்து, 32 ஆயிரம் வாக்குகள் பெற்று திமுக வேட்பாளர் மணி தொடர்ந்து வருகிறார்.
அதேவேளையில், பாஜக மாநில தலைவர் கோவையில் பின்தங்கி 3வது இடத்தில் உள்ளார். கோவை மக்களவை தொகுதியில் திமுக வேட்பாளர் ராஜ்குமார் 7299 வாக்குகள் முன்னிலை வகித்து வருகிறார். திமுக – 27,525. பா.ஜ.க – 20,226. அதிமுக – 10,747
தென்காசி நாடாளுமன்ற தொகுதியில் திமுக 8110 வாக்கு வித்தியாசத்தில் முன்னிலையில் இருக்கிறது. முதல் சுற்றில் தென்காசி நாடாளுமன்ற தொகுதியில் திமுக வேட்பாளர் ராணி ஸ்ரீகுமார் 20108 வாக்குகள், அதிமுக வேட்பாளர் கிருஷ்ணசாமி 11998 வாக்குகள், பாரதிய ஜனதா கட்சி வேட்பாளர் ஜான்பாண்டியன் 7115 வாக்குகள், நாம் தமிழர் கட்சி வேட்பாளர் மதிவாணன் 7455 பெற்றுள்ளனர்.
சிதம்பரம் நாடாளுமன்றத் தொகுதியில் திருமாவளவன் முன்னிலை: விசிக : 9803, அதிமுக: 4157, பாஜக: 1910, நாம் தமிழர்: 927
தூத்துக்குடி தொகுதியில் கனிமொழி முன்னிலையில் உள்ளார்.
திருச்சியில் முதல் சுற்று முடிவில் துரை வைகோ முன்னிலை: மதிமுக : 26186, அதிமுக : 12981 அமமுக செந்தில்நாதன் : 4047, நாம் தமிழர் ராஜேஸ் : 5847
நாமக்கல் மக்களவைத் தொகுதியில் அதிமுக வேட்பாளர் தமிழ் மணி முன்னிலை வகித்து வருகிறார். இவர் 8643 வாக்குகள் பெற்று, 474 வாக்குகள் முன்னிலையில் உள்ளார். இரண்டாம் இடத்தில் திமுகவின் மாதேஸ்வரனும் பாஜகவின் கே.பி.ராமலிங்கம் மூன்றாவது இடத்திலும் உள்ளனர்.
நீலகிரி தொகுதியில் மத்திய அமைச்சரும் பாஜக வேட்பாளருமான எல்.முருகன் பின்னடைவைச் சந்தித்துள்ளார். திமுக வேட்பாளர் ஆ.ராசா தொடர்ந்து முன்னிலை வகித்து வருகிறார்.
கன்னியாகுமரி தொகுதியில் பாஜக வேட்பாளர் பொன்னார், 2775 வாக்குகள் முன்னிலையில் உள்ளார்.