சென்னை

சென்னை உயர்நீதிமன்ற கோடை விடுமுறை முடிந்து இன்று முதல் பணிகள் தொடங்குகின்றன.

கடந்த மே மாதம் சென்னை உயர் நீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்ற மதுரை கிளைக்கு கோடை விடுமுறை விடப்பட்டது.  இந்த நடைமுறை ஆங்கிலேயர் ஆட்சி காலத்திலிருந்தே இந்த நடைமுறை கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. அதன்படி மே 2ம் தேதி முதல் ஜூன் 2ம் தேதி வரை சென்னை உயர் நீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்ற மதுரை கிளைக்கு கோடை விடுமுறை விடப்பட்டது.

நீதிமன்றத்துக்கு கோடை விடுமுறை விடப்பட்டாலும் அவசர வழக்குகளை விசாரிப்பதற்காக வாரம் 3 நீதிபதிகள் நியமிக்கப்பட்டனர்.இதில்  முதல் வாரத்தில் நீதிபதி ஜெகதீஷ் சந்திரா தலைமையிலும், இரண்டாவது வாரத்தில் நீதிபதி பி.டி.ஆஷா தலைமையிலும், 3வது வாரத்தில் நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் தலைமையிலும், 4வது வாரத்தில் நீதிபதி சத்திய நாராயண பிரசாத் தலைமையிலும் அவசர வழக்குகள் விசாரிக்கப்பட்டன.

நேற்றுடன் கோடை விடுமுறை முடிவடைந்தன.  எனவே ஒரு மாத கால கோடை விடுமுறைக்குப் பின், சென்னை உயர் நீதிமன்றம் இன்று முதல் மீண்டும் முழு அளவில் செயல்பட உள்ளது. கடந்த மே மாதம் முழுவதும் விடுமுறை காலத்தில் அவசர வழக்குகள் மட்டுமே விசாரிக்கப்பட்ட நிலையில் இன்று முதல்   நீதிமன்றங்கள் முழுமையாக செயல்படும் என தெரிவித்துள்ளனர்.