டெல்லி

டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தாம் மீண்டும் சிறைக்கு சென்றதும் தம்மை பாஜகவினர் மேலும் துன்புறுத்த முயவார்கள் எனக் கூறி உள்ளார்.

கடந்த மார்ச் மாதம் டெல்லி அரசின் மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் முதல்-மந்திரியும், ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளருமான கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்பட்டார். உச்சநீதிமன்றம் அவருக்கு கடந்த 10 ஆம் தேதி 21 நாட்கள் இடைக்கால ஜாமீன் வழங்கியது.

இந்த ஜாமீனை நாடாளுமன்ற தேர்தல் பிரசாரத்தில் பங்கேற்பதற்காக வழங்கிய நீதிபதிகள், வருகிற ஜூன் 2-ந்தேதி சரணடைந்து மீண்டும் அவர் சிறை செல்ல வேண்டும் என்றும் உத்தரவிட்டனர். சிறையில் இருந்து வெளியே வந்த கெஜ்ரிவால் நாடாளுமன்ற தேர்தலுக்காக தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டார்.

நாளை மறுநாள்டன் கெஜ்ரிவாலின் இடைக்கால ஜாமீன் முடிவுக்கு வருவதால் வரும் 2 -ம் தேதி திகார் சிறையில் சரண்டர் ஆக உள்ளார். இன்று இது குறித்து அரவிந்த் கெஜ்ரிவால் உருக்கமான வீடியோ ஒன்றை வெளியிட்டு இருக்கிறார்.

கெஜ்ரிவால் அந்த வீடியோவில்-

”என்னை இந்த முறை எவ்வளவு காலம் சிறையில் வைத்திருப்பார்கள் என்று எனக்குத் தெரியவில்லை. ஆயினும் என் உற்சாகம் அதிகமாக உள்ளது. நான் நாட்டை சர்வாதிகாரத்திலிருந்து காப்பாற்ற சிறைக்குச் செல்வதில் பெருமிதம் கொள்கிறேன். பாஜகவினர் என்னை பல வழிகளில் நிலைகுலைய வைக்க முயன்று என் குரலை நசுக்க முயன்றனர்.

அதில் அவர்கள் வெற்றி பெறவில்லை. சிறையில் இருந்த போது, அவர்கள் என்னை பல வழிகளில் சித்திரவதை செய்தனர். எனது மருந்துகளை நிறுத்திவிட்டார்கள். அவர்களுக்கு என்ன வேண்டும் என்பது எனக்குத் தெரியவில்லை. அவர்கள் ஏன் இவ்வாறு செய்கிறார்கள்? என்னை மேலும் துன்புறுத்த முயல்வார்கள். நான் இதற்கெல்லாம் அடிபணிய மாட்டேன்”

என்று கூறியுள்ளார்.