சென்னை
நாளை வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துளது.
கடந்த சில நாட்களாக தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் கோடை மழை பெய்து வருகிறது. இதில் கோவை, நீலகிரி, நெல்லை, தென்காசி, கன்னியாகுமரி, மதுரை, ராமநாதபுரம், தஞ்சாவூர், திண்டுக்கல் உள்பட பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்துள்ளது.
நாளை வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு உள்ளதாகவும் இது வருகிற 24 ஆம் தேதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் ஆழ்கடலில் மீன்பிடிக்கும் மீனவர்கள் வருகிற 23 ஆம் தேதிக்குள் கரைக்கு திரும்ப வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தி உள்ளது.
இன்றும் நாளையும் தேனி, தென்காசி, நெல்லை மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் அதி கனமழைக்கான சிவப்பு எச்சரிக்கையை வானிலை ஆய்வு மையம் அறிவித்து இருந்த நிலையில் தற்போது, அந்த 4 மாவட்டங்களில், சிவப்பு எச்சரிக்கை வாபஸ் பெறப்பட்டுள்ளது.
வான்லை ஆய்வு மையம் வெப்பநிலையை பொறுத்தவரையில், தமிழகம் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் இயல்பைவிட குறைவாகும், இயல்பை ஒட்டியும் இருக்கும் என்று தெரிவித்துள்ளது.