சென்னை: “குடும்ப வன்முறையால் பாதிக்கப்பட்ட பெண்கள், புகாரளிக்க தயங்க வேண்டாம்” தங்களுக்கு நேர்ந்த கொடுமைகளைப் பற்றி தெரிவிக்கலாம் என சென்னை பெருநகர காவல்துறை அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. அத்துடன், 181 | 1091 | 100 என்ற எண்ணை அழைத்து புகார் அளிக்கலாம் என்றும் கூறியுள்ளது.

இது தொடர்பாக சென்னை பெருநகர காவல் துறையின் எக்ஸ் சமூக வலைத்தள பதிவில் ,

 குடும்ப வன்முறையால் பாதிக்கப்பட்ட பெண்கள், புகாரளிக்க தயங்க வேண்டாம். புகாரளித்து உடனடி தீர்வினை பெற்றிடுங்கள். குடும்ப வன்முறையை அறவே ஒழிப்போம், பெண்களுக்கு பாதுகாப்பான சமுதாயத்தை உருவாக்குவோம் என்று தெரிவித்துள்ளது.

அந்த வகையில் 181 | 1091 | 100 என்ற எண்களை தயங்காமல் அழைத்து, தங்களுக்கு நேர்ந்த கொடுமைகளைப் பற்றி தெரிவிக்கலாம் என்றும் அறிவுறுத்தியுள்ளது சென்னை பெருநகர காவல்துறை.

இன்றே குடும்ப வன்முறைக்கு முடிவு கட்டுவோம்!

என குறிப்பிட்டுள்ளது.

குடும்ப வன்முறை என்பது, ஒருவருக்கு எதிராக அவருடைய குடும்பத்தில் உள்ள ஒருவர் மேற்கொள்ளும் வன்முறையாகும். வன்முறையைக் கையாளுபவர், துன்புறுத்துபவரைத் தன்னுடைய கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர முயற்சி செய்வார்.

குடும்ப வன்முறை சட்டம் 1994 (Domestic Violence Act 1994) அமலுக்கு வந்த பிறகு, குடும்ப வன்முறை ஒருவரின் தனிப்பட்ட பிரச்சனை கிடையாது. அது ஒரு சமுதாயப் பிரச்சனை ஆகும். தண்டனைச் சட்டத்தின்படி அது ஒரு குற்றமாகும். குடும்ப வன்முறை சட்டம் 1994 கொண்டு வரப்படுவதற்கென மலேசியாவில் உள்ள பெண் அமைப்புக்கள் ஒரு தசாப்தமாக அது தொடர்பான பரப்புரைகளை மேற்கொண்டு வந்தன.

இப்பொழுது, குடும்ப வன்முறைக்கு ஆளானவர்கள் காவல்துறை, சமூகநல இலாகா, மருத்துவமனை மற்றும் அரசாங்க சார்பற்ற அமைப்புகள் மூலமாக உதவிகளைப் பெற முடிவதோடு மட்டுமல்லாமல், அவர்களைத் துன்புறுத்தியவர்கள் மீது நடவடிக்கையும் எடுக்க முடிகிறது. குடும்ப வன்முறைக்கு ஆளானவர்களில் பெரும்பாலோர் பெண்களாக இருந்தாலும், ஆண்கள், முதுமை நிலையில் உள்ள பெற்றோர்கள் மற்றும் சிறார்களும் கொடுமைக்கு ஆளாகிறார்கள்.

இந்த வகை வன்முறை, அநேக விதமான உறவுகளில் ஏற்படலாம், உதாரணமாக: கணவன் மனைவிக்கு இடையே, அல்லது ஆண் பெண் நண்பர்களுக்கு இடையே; வயது நிரம்பியவர்களுக்கும், குழந்தைகளுக்கும் இடையே அல்லது வயது நிரம்பியவர்கள் மற்றும் வயது முதிர்ந்த பெற்றோர்களுக்கு இடையே; அல்லது அத்தைகள், மாமாக்கள் மற்றும் தாத்தா பாட்டிகள் போன்ற தூரத்துக் குடும்ப உறுப்பினர்களுக்கு இடையே; அல்லது பாலுறவு அல்லாத உறவு ஒன்றில் ஒன்றாகச் சேர்ந்து வாழ்கிறவர்களுக்கு இடையே ஏற்படலாம்.

இதனை ஒரு விதமான வலுக்கட்டாயம் மற்றும் கட்டுப்பாடு என்பதாகவே பெரும்பாலும் குறிப்பிடப்பிடுகிறோம். துஷ்பிரயோகம் செய்பவர்களை சில நேரங்களில் ‘வன்முறை செய்பவர்கள்’ என்றே அழைக்கிறோம்.

குடும்ப வன்முறை வகைகள் என்ன?

வீட்டு மற்றும் குடும்ப வன்முறை என்பது, ஒரு அந்தரங்கமான உறவில் அல்லது மற்ற வகையான குடும்ப உறவில் ஏற்படுகிற துஷ்பிரயோகமான நடத்தையின் வடிவமாகும், அதில் ஒரு நபர் மற்றொரு நபரை மேற்கொண்டு அவரை அடக்கிப் பயமுறுத்துகிறார். இது வீட்டு வன்முறைகுடும்ப வன்முறை அல்லது அந்தரங்க துணைவர் முறை என்றும் அழைக்கப்படுகிறது.
  • உடல் ரீதியான வன்முறை எ.கா: ஒருவரை அடித்தல், தள்ளுதல், குத்துதல், அறைதல், உதைத்தல், பொருட்களை வீசுதல் அல்லது கழுத்தை நெரித்தல்.
  • மன ரீதியான வன்முறை எ.கா: நேரடியாகவோ அல்லது சமூக ஊடகங்கள் மூலமாகவோ ஒருவரை அவமானப்படுத்தும் நோக்கில் அல்லது மதிப்பற்றவர் என்று ஒருவரை உணர்த்தும் வகையில் வார்த்தைகளைப் பயன்படுத்துதல்.
  • பாலியல் துன்புறுத்தல் எ.கா: ஒருவரை அடக்க அல்லது அவமானப்படுத்த பாலியலைப் பயன்படுத்துதல். பாதுகாப்பற்ற பாலியல் நடவடிக்கை மற்றும் பாதிக்கப்பட்டவர் பங்கேற்க விரும்பாத பாலியல் நடைமுறைகளை மேற்கொள்வதாக மிரட்டுதல்.
  • தனிமைப்படுத்துதல் எ.கா: ஒருவரின் இயக்கத்தைக் கட்டுப்படுத்துதல் அல்லது அவர் குடும்ப உறுப்பினர்கள் அல்லது நண்பர்களைப் பார்ப்பது அல்லது பேசுவதைத் தடுத்தல்.
  • அச்சுறுத்தல்கள் எ.கா. ஒரு நபர் அல்லது குழந்தைகள் அல்லது குடும்பத்தின் செல்லப்பிராணியை காயப்படுத்துதல், கடத்துதல் அல்லது தீங்கு விளைவிப்பதாக மிரட்டுதல். அல்லது தற்கொலை செய்து கொள்வதாக அச்சுறுத்துதல்.
  • பொருளாதார வன்முறை எ.கா: ஒருவரின் பண சுதந்திரம் அல்லது பாதுகாப்பைக் கட்டுப்படுத்துதல். ஒருவரின் வீட்டுத் தேவைகளுக்கான பணத்தைக் கொடுக்க மறுத்தல் அல்லது தடுத்து வைத்தல் அல்லது அவரின் வருமானத்தை அபகரித்துக்கொள்ளுதல்.
  • பின்தொடர்வது எ.கா: தொடர்ச்சியாகத் துன்புறுத்துவது அல்லது அச்சுறுத்துவது. பாதிக்கப்பட்டவரின் வீடு அல்லது பணியிடத்தைப் பின்தொடர்தல் அல்லது காட்டிக்கொடுத்தல், தொலைபேசி அழைப்புகள் மூலம் தொந்தரவு கொடுத்தல், குரல் மடல் (voicemail), புலனம் (WhatsApp) போன்ற சமூக ஊடகங்களின் மூலமாக மிரட்டுதல்.

இதுபோன்று மிரட்டல் மற்றும் துன்புறுத்தலுக்கு ஆளாகுபவர்கள், காவல்துறை வெளியிட்டுள்ள உதவி எண்ணில் தொடர்புகொண்டு புகார் தெரிவிக்கலாம் என சென்னை மாநகர காவல்துறை அறிவித்து உள்ளது.