சென்னை

ன்று தனியார் பள்ளிகளில் இலவசக் கல்விக்கான மாணவர் சேர்க்கைக்கு விண்ண்ப்பிக்க கடைசி நாள் ஆகும்.

Madhya Pradesh, June 10 (ANI): Students appearing in the remaining examination of higher secondary conducted by Madhya Pradesh Board of Secondary Education, in Bhopal on Wednesday. (ANI Photo)

தமிழகம் முழுவதும் உள்ள சிறுபான்மையற்ற தனியார் பள்ளிகளில் குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாய கல்வி உரிமை சட்டம் (ஆர்.டி.இ.) 2009-ன் கீழ், வாய்ப்பு மறுக்கப்பட்ட, நலிவடைந்த பிரிவினரின் குழந்தைகளுக்கு 25 சதவீத ஒதுக்கீட்டில் 85 ஆயிரத்துக்கும் அதிகமான இடங்களுக்கு மாணவர் சேர்க்கை அறி விக்கப்பட்டு வருகிறது.

இவ்விடக்கள்ல் சேரும் மாணவ-மாணவி களுக்கு பள்ளிகல்வித்துறை கல்வி கட்டணத்தை அரசே ஏற்கும்.  அதன்படி 2024-25-ம் கல்வியாண்டுக்கான மாணவர் சேர்க்கை ஆன்லைன் விண்ணப்ப பதிவு கடந்த ஏப்ரல் மாதம் 22-ந்தேதி தொடங்கி இதுவரை 80 ஆயிரத்துக்கும் அதிகமானோர் இலவச மற்றும் கட்டாய கல்வி உரிமை சட்டத்தின் கீழ் மாணவர் சேர்க்கைக்கு பெற விண்ணப்பித்துள்ளனர்.

ஆர்.டி.இ. சட்டத்தின் கீழ் விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் இன்றுடன் (திங்கட்கிழமை) நிறைவு பெறுகிறது. ஆகவே, விருப்பமுள்ள பெற்றோர்கள் https://rteadmission.tnschools.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். மேலும் ஒரே பள்ளியில் குறிப்பிட்ட இடங்களை விட அதிக விண்ணப்பங்கள் குவிந்தால், அந்த இடங்களுக்கு குலுக்கல் முறையில் சேர்க்கை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.