காட்பாடி: தமிழகத்தில் கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருட்கள் விற்பனையில் அரசியல் கட்சிக்கும் காவல்துறையினருக்கும் தொடர்பு இருப்பதாக நீதிமன்றமே குற்றம் சாட்டி உள்ளது,  தமிழழகத்தில்,  போதை கலாசாரமாக மாறி வருவதை இரும்பு கரம் கொண்டு ஒடுக்க வேண்டும் முன்னாள் கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் வலியுறுத்தி உள்ளார்.

வேலூர் மாவட்டத்தில் கலந்துகொள்ள இன்று காலை (மே 17) வந்தே பாரத் ரயில்மூலம் காட்பாடி  வருகை தந்த தெலங்கான முன்னாள் ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜனுக்கு  ரயில் நிலையத்தில் சிறப்பான வரவேற்பு கொடுக்கப்பட்டது. பின்னர்,  செய்தியலாளர்களை சந்தித்தார். அப்போது,    வந்தே பாரத் ரயில் தற்போது மக்களுக்கு மிகவும் பயனுள்ளதாக அமைந்துள்ளது. இந்த ரயில் மூலம் பயணம் செய்வதால் நேரம் மிச்சப்படுத்தப்படுகிறது. இதற்காக பிரதமர் நரேந்திர மோடிக்கு நன்றியினை தெரிவித்துக் கொள்கிறேன். மேலும் விரைவில் சென்னையில் இருந்து மைசூருக்கு புல்லட் ரயில் வர உள்ளது.

பிரதமர் யாரையும் பிளவு படுத்தவில்லை, எல்லோரையும் ஒன்றாகத்தான் இணைக்கிறார் என்றவர், முத்தலாக்கில் இருந்து விடிவுகாலம் பிறந்திருக்கிறது, ஹஜ் பயணத்திற்கு பெண்களை அழைத்து செல்வதற்கு அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டிருக்கிறது. மத்தியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் 3 வது முறையாக ஆட்சி அமைய போகிறது என்பதை மக்கள் நன்றாக புரிந்து வைத்துள்ளனர் என்றார்.

பின்னர், நாடாளுமன்ற தேர்தல் தொடர்பான கேள்விக்கு பதில் அளித்தவர், நடைபெற்று முடிந்த நான்கு கட்ட மக்களவைத் தேர்தலில் பாஜக ஆட்சி அமைக்க எவ்வளவு இடங்கள் வேண்டுமோ அவ்வளவு கிடைத்துவிட்டது. எதிர்க்கட்சியினர் சுயநலத்துக்காக வாக்குகளை கேட்கின்றனர். ஆனால் பிரதமர் மோடி மக்களின் நலன் கருதி வாக்குகளை கேட்டு வருகிறார் என்றார்.

காவிரியில் தண்ணீர் திறந்துவிட கர்நாடக மாநில காங்கிரஸ் அரசு மறுப்பு தெரிவித்து வருவது குறித்த கேள்விக்கு பதில் அளித்தவர்,  தமிழக அரசு இந்தியா கூட்டணியில் இருந்து வருகிறதுமு. ஆனால், அந்த கூட்டணி அரசே தமிழ்நாடுக்கு தண்ணீர் திறந்து விட மறுக்கிறது. தமிழகத்திற்க்கு 2.5 டிஎம்சி தண்ணீர் தர வேண்டுமென ஒழுங்காற்று குழு கர்நாடக அரசுக்கு உத்தரவிட்டுள்ளது. அதை கேட்டு வாங்க தமிழக அரசுக்கு வலுவுல்லை, இதற்காக கர்நாடக அரசுக்கு  தமிழ்நாடு அரசு  எந்தவித அழுத்தமும் கொடுக்கவில்லை.

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் எதிர்க்கட்சியாக இருந்தபோது காவிரி தண்ணீருக்காகவும், டாஸ்மாக் கடைகளுக்கு எதிராகவும் போராட்டம் நடத்தினார். காவிரி பிரசனையில் அதிகாரிகள் நேரடியாகச் சென்று விவாதிக்க வேண்டும்.  அரசு அதிகாரிகள் நேரடியாகச் சென்று பங்கேற்க தமிழக அரசு ஊக்கப்படுத்தாதது ஏன்?.  காவிரியில் தண்ணீர் கொண்டு வருவதில் தமிழக அரசு தீவிரம்காட்ட வில்லை என்று தனக்கு தோன்றுகிறது. காவிரியில் தண்ணீர் கொண்டு வரவில்லை ஆனால் அதிகமாக டாஸ்மாக் கடைகளை கொண்டு வந்துள்ளார்கள் இதுதான் திமுகவின் சாதனை என்றார். தமிழக அரசு எல்லா விதத்திலும் தோல்வி அடைந்து வருகிறது.

போதை பொருள் நடமாட்டம் குறித்த கேள்விக்கு பதில் கூறியவர்,  போதை பொருள் கடத்தல்  வழக்கில் முன்னாள் திமுக பிரமுகர்,  ஜாபர் சாதிக்கை திமுக அரசு காப்பாற்ற நினைக்கிறது. தமிழகத்தில் கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருட்கள் அதிக அளவில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதை உயர்நீதி மன்மே கண்டித்திருக்கிறது.  கஞ்சா விற்பனை செய்பவர்களுக்கும் காவல்துறையினருக்கும் தொடர்பு இருப்பதாக சொல்லி இருக்கிறார்கள்.

எனவே திமுகவினருக்கும் சிறை துறையினருக்கும் கஞ்சா நடமாட்டத்தில் அதிக அளவில் தொடர்பு உள்ளது. போதைப்பொருள்கள் விற்பனையில் காவல்துறையினருக்கும் அரசியல் கட்சியினருக்கும் எந்த அளவிற்கு தொடர்பு உள்ளது என்பதை கண்காணிக்கப்பட வேண்டும். தமிழகத்தில் கஞ்சா கலாசாரம் ஒழிக்கப்பட வேண்டும். தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு சீர்குலைவு ஏற்படுவதற்கும், விபத்துக்கள் அதிகரிப்பதற்கும் போதைப்பொருள்கள் தான் காரணம். எனவே போதைப்பொருள் நடமாட்டத்தை கட்டுப்படுத்த வேண்டும் என்றவர்,  உயர்நீதிமன்றம் சொன்னதைப் போலவே கஞ்சா பொருள்கள் விற்பனை தொடர்பாக, சிறை துறையினருக்கும் அரசியல் கட்சியினருக்கும் உள்ள தொடர்பை கண்டுபிடித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியதுடன்,   போதை மற்றும் வன்முறை கலாசாரத்தை இரும்பு கரம் கொண்டு ஒடுக்க வேண்டும் என்றார்.

இவ்வாறு தமிழிசை சௌந்தரராஜன் கூறினார்.

போதை பொருள் கடத்தல் மன்னன் ஜாபர் சாதிக் மீது 26 வழக்குகள்! டிஜிபி சங்கர் ஜிவால் ஓப்பன் டாக்…

மாணவர் சங்க நிர்வாகிகளுக்கு போதைப்பொருள் சப்ளை செய்த ஜாபர் சாதிக்! அதிர்ச்சி தகவல்கள்…