சென்னை: பராமரிப்பு பணிகள் காரணமாக இன்று சென்னை பீச் – தாம்பரம் – செங்கல்பட்டு வழித்தடங்களில் சில மின்சார ரயில் சேவை ரத்து செய்யப்படுவதாக ரயில்வே அறிவித்து உள்ளது.
பராமரிப்பு பணி காரணமாக சென்னை கடற்கரை – தாம்பரம் – செங்கல்பட்டு வழித்தடத்தில் 3 நாட்கள் சில மின்சார ரயில்கள் ரத்து செய்யப்படுவதாகவும், சில ரயில்கள் பகுதியளவில் ரத்து செய்யப்படுவதாகவும் தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

இதுதொடர்பாக ரயில்வே வெளியிட்டுள்ள அறிவிப்பில், சென்னை கடற்கரையில் இருந்து செங்கல்பட்டு செல்லும் ரயில்கள் பராமரிப்பு காரணமாக, ஒரு சில ரயில்கள் முழுமையாக ரத்து செய்யப்படுகிறது. அதே போன்று ஒரு சில ரயில்கள் பாதி வழியில் ரத்து செய்யப்படுகிறது.
இது குறித்து தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்திருப்பதாவது : பராமரிப்பு காரணமாக நான்கு ரயில்கள் முழுமையாக ரத்து செய்வதாகவும், இரண்டு ரயில்கள் பாதியில் நிறுத்தப்படுவதாகவும் தெரிவித்துள்ளது .
முழுமையாக ரத்து செய்யப்படும் ரயில்கள்
ரயிலின் எண் 40135 சென்னை கடற்கரை தாம்பரம் இடையிலான ரயில்கள் இரவு ஒன்பது, பத்து மணி அளவில் இயக்கப்படும் ரயில்கள் முழுமையாக ரத்து செய்யப்படுகிறது. மே 15, 16 மற்றும் மே 17 ஆகிய நாட்களில் இந்த ரயில் இயங்காது.
ரயில் எண் 40150 இரவு 11 :40 மணி அளவில் தாம்பரத்தில் இருந்து சென்னை பீச் செல்லும் ரயில் முழுமையாக ரத்து செய்யப்படுகிறது. இந்த ரயில் மே 15 16 17 ஆகிய தேதிகளில் இயங்காது.
ரயில் எண் 40001 காலை 4:15 சென்னை கடற்கரையில் இருந்து தாம்பரம் வரை இயக்கக்கூடிய ரயில் மே 15 16 17 18 ஆகிய தேதிகளில் முழுமையாக ரத்து செய்யப்படுகிறது.
தாம்பரத்தில் இருந்து அதிகாலை 4.15 மணிக்கு புறப்பட்டு சென்னை கடற்கரை வரும் மின்சார ரயில் முழுவதுமாக ரத்து செய்யப்படும். இந்த ரயில் மே 15, 16 ,17 ,18 ஆகிய தேதிகளில் முழுமையாக ரத்து செய்யப்படுகிறது
பாதி வழியில் நிறுத்தப்படும் ரயில்கள்
வண்டி எண் 40572 இரவு 11 மணி அளவில் செங்கல்பட்டு ரயில் நிலையத்திலிருந்து சென்னை கடற்கரை வரை இயக்கக்கூடிய சென்னை எக்மோர் வரை மட்டுமே இயக்கப்படும். மே 15 16 17 ஆகிய தேதிகளில் பகுதி நேரமாக இந்த ரயில் ரத்து செய்யப்படுகிறது.
இதேபோன்று சென்னை கடற்கரையிலிருந்து அதிகாலை 3 :55 மணியளவில் செங்கல்பட்டு வரை இயங்கக்கூடிய ரயில் பகுதி நேரமாக ரத்து செய்யப்படுகிறது இது சென்னை கடற்கரையிலிருந்து இயங்காமல் சென்னை எக்மோரில் இருந்து இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ரயில் மே மாதம் 15, 16, 17 மற்றும் 18 ஆகிய தேதிகளில் பகுதி நேரமாக ரத்து செய்யப்படுகிறது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.