சென்னை

சென்னை நீல வழித்தடத்தில் மெட்ரோ ரயில் சேவை பாதிக்கப்பட்டுள்ளது.

சென்னையின் போக்குவரத்து நெரிசலை பெரிதும் குறைக்கும் வண்ணம் சென்னை மெட்ரோ ரயில் சேவைகள் செயல்பட்டு வருகின்றன.   பலருக்கு இந்த சேவை இன்றியமையாததக ஆகி  விட்டது

இந்நிலையில் இன்று மீனம்பாக்கம் – விமான நிலையம் இடையே  திடீரென தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டுள்ளது.  எனவே சென்னை சென்ட்ரல் – விமான நிலையம் இடையிலான நீல வழித்தடத்தில் மெட்ரோ ரயில் சேவை பாதிக்கப்பட்டுள்ளது.

இதையொட்டி  சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் விமான நிலையம் செல்லும் பயணிகள், ஆலந்தூர் மெட்ரோ ரயில் நிலையத்திற்கு சென்று பச்சை வழித்தடத்தில் பயணம் மேற்கொள்ள அறிவுறுத்தி உள்ளது.