சென்னை: தமிழ்நாடு, புதுச்சேரி மாநிலங்களில்,  11-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று  காலை 9.30 மணி அளவில் வெளியிடப்படுவதாக பள்ளி கல்வித்துறை அறிவித்து உள்ளது.

தமிழ்நாட்டில் ஏற்கனவே 12ம் வகுப்பு, 10ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானதுது. பிளஸ்-2 பொதுத்தேர்வு முடிவு கடந்த 6-ந்தேதி வெளியானது. தேர்வில் மொத்தம் 94.56 சதவீத மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். அதே போல் மே 12ந்தேதி 10ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிககள் வெளியாகின. இதில், 1.55 சதவீத மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

இதைத்தொடர்ந்து ஏற்கனவே அறிவித்திருந்தபடி, இன்று காலை 9.30 மணிக்கு பேராசிரியர் அன்பழகன் கல்வி வளாகத்தில் அமைந்துள்ள அரசு தேர்வுகள் இயக்ககத்தில் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட உள்ளது.

இதுதொடர்பாக அரசு தேர்வுத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:- 2023-2024 ஆம் கல்வியாண்டில் மேல்நிலை முதலாம் ஆண்டு பயின்ற பள்ளி மாணவர்களின் பொதுத் தேர்வு முடிவுகள் வருகிற 14.08.2024 (செவ்வாய்கிழமை) அன்று காலை 9.30 மணிக்கு வெளியிடப்படவுள்ளது.

முதன்மைக் கல்வி அலுவலர்கள் மாவட்டக் கல்வி அலுவலர்கள். தங்கள் மாவட்டத்தில் உள்ள அனைத்து மேல்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர்களும் 14.08.2024 அன்று www.dgetngovin என்ற இணையதளத்திற்குச் சென்று, தங்கள் பள்ளிகளுக்கு ஏற்கனவே வழங்கப்பட்டுள்ள User ID மற்றும் Password- பயன்படுத்தி மேல்நிலை முதலாம் ஆண்டு வகுப்பு மாணவர்களுக்கான அட்டவணைப்படுத்தப்பட்ட மதிப்பெண் பட்டியலை (TML) முற்பகல் 10.00 மணி முதல் பதிவிறக்கம் செய்து கொள்ள அறிவுறுத்துமாறும், அதற்குத் தேவையான அனைத்து முன்னேற்பாடுகளையும் தயார் நிலையில் வைத்திருக்க பள்ளித் தலைமையாசிரியர்களை அறிவுறுத்துமாறும் கேட்டுக்கொள்ளப்படுகிறது.

மேலும், முதன்மைக் கல்வி அலுவலர்கள் தங்கள் மாவட்டத்திற்கான அனைத்துப் பள்ளிகளின் தேர்வு முடிவுகள் மற்றும் பகுப்பாய்வு அறிக்கையினை 14.05.2024 (செவ்வாய்கிழமை) அன்று காலை 10.00 மணிக்கு தங்களது User-ID மற்றும் Password-ஐ பயன்படுத்தி பதிவிறக்கம் செய்துக்கொள்ளலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுளள்து.