டெல்லி: சிபிஎஸ்இ 12ம் வகுப்பு தேர்வு முடிவுகள் இன்று வெளியான நிலையில், தேர்ச்சியில் தென்மாநிலங்கள் முன்னணியில் உள்ளது. வடமாநிலங்களில் பின்தங்கி உள்ளது தெரிய வந்துள்ளது. சென்னை மண்டலம் 3வது இடத்தை பிடித்துள்ளது.
நாடு முழுவதும் இன்று சிபிஎஸ்இ 12ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியாகி உள்ளது. இதில் கேரள மாநிலத்தின் திருவனந்தபுரம் மண்டலம் முன்னணியில் உள்ளது. தொடர்ந்து விஜயவாடா, சென்னை, பெங்களூரு மண்டலங்களில் முன்னணியில் உள்ளன. பாஜக ஆட்சி செய்யும் மாநிலங்களி கல்வியில் பின்தங்கியே உள்ளன.
மண்டல வாரியாக வெளியிடப்பட்ட தேர்வு முடிவுகளில் கேரள மாநில தலைநகர் திருவனந்தபுரம் முதலிடத்தை பிடித்துள்ளது. இரண்டாவது இடத்தை ஆந்திர மாநிலத்தின் விஜயவாடா மண்டலும், சென்னை மண்டலம் 3வது இடத்தையும், கர்நாடக மாநிலத்தின் பெங்களூரு மண்டலம் 4வது இடத்தையும் பிடித்துள்ளது.
பாஜக ஆட்சி செய்து வரும் பல மாநிலங்களில் கல்வி வளர்ச்சியில் பின்தங்கியே உள்ளது. குறிப்பாக யோசி ஆதித்யநாத் ஆட்சி செய்து வரும், உத்திர பிரதேசத்தின் பிரயாக்ராஜ் , நொய்டா மண்டலங்கள் கடைசி இடங்களையே பிடித்துள்ளது.