ண்டிகர்

பாஜகவினரின் 400 இடங்களுக்கு மேல் வெற்றி என்னும் கனவு நிறைவேறாது என பஞ்சாப் முதல்வர் பதவந்த் மான் தெரிவித்துள்ளார்.

நாடெங்கும் மக்களவை தேர்தல் ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டங்களாக நடைபெறுகிறது. இதில் இதுவரை 3 கட்ட தேர்தல்கள் நடந்து முடிந்துள்ள நிலையில், 4-ம் கட்ட தேர்தல் இன்று நடைபெற்று வருகிறது.

பாஜக இந்த தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி 400 இடங்களுக்கு மேல் வெற்றி பெறும் என கூறி வருகிறது.

பஞ்சாப் முதல்வரும் ஆம் ஆத்மி தலைவர்களில் ஒருவருமான பகவந்த் மான் செய்தியாளர்களிடம்,

“பா.ஜ.க. இந்த முறை 400 இடங்களுக்கு மேல் வெற்றி பெறப் போவதில்லை. அவர்களால் கரையைக் கூட கடக்க முடியாது. பா.ஜ.க. இந்த முறை முழுமையாக தோல்வி அடைந்து, வனவாசத்திற்கு அனுப்பப்படும்.

தேர்தல் நடைபெறும் சமயத்தில் ஒரு தேசிய கட்சியின் தலைவரை சிறையில் வைத்திருக்க  முடியாது எனக் கூறி, அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு உச்சநீதிமன்றம் இடைக்கால ஜாமீன் வழங்கியுள்ளது.

உச்சநீதிமன்றத்துக்கு நாங்கள் நன்றி தெரிவிக்க விரும்புகிறோம். ஏனெனில் கெஜ்ரிவால் ஜாமீனில் விடுவிக்கப்பட்டது ஆம் ஆத்மி கட்சிக்கு கிடைத்த மிகப்பெரிய நிவாரணம்.”

என்று தெரிவித்தார்.