சென்னை

மிழக காங்கிரஸ் தலைவர் செல்வபெருந்தகை பாஜக ஆட்சி மீது முதலீட்டாளர்கள் நம்பிக்கை இழந்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

இன்று சென்னை சத்யமூர்த்தி பவனில் தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை செய்தியாளர்களிடம்,

.“பங்கு சந்தையில் முதலீடு செய்தவர்கள் அனைவரும் தற்போது தங்கள் பங்குகளை விற்பனை செய்து வருகின்றனர்.  வரலாறு காணாத வகையில் ரூ.7 லட்சத்து 60 கோடி நஷ்டம் ஏற்பாட்டாலும் பரவாயில்லை என விற்றுள்ளார்கள். உள்நாட்டு முதலீட்டாளர்கள், வெளிநாட்டு முதலீட்டாளர்கள் இந்த ஆட்சி மீது நம்பிக்கை இழந்து தங்களுடைய பங்குகளை வெளிநாட்டிற்கு விற்று வருகிறார். 

காமராஜர் நினைவிடம் சீரமைக்க பணியை துவங்கியுள்ள தமிழ்நாடு அரசுக்கும், முதலமைச்சருக்கும் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம். குறை சொல்லுகிறார்கள், குற்றம் சொல்லுகிறார்கள் என்று பார்க்காமல் உடனடியாக முதலமைச்சர் நடவடிக்கை எடுத்துள்ளார். 

கச்சத்தீவு குறித்து அண்ணாமலை வெளியிட்ட ஆவணம் போலியானது. பிரதமர் மோடி மற்றும் வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் இதுகுறித்து பேசியுள்ளனர். இதில் பித்தலாட்டம் நடந்துள்ளது என தெரிவித்தோம். ஆனால் இதுவரை அண்ணாமலை வாய் திறக்கவில்லை. குற்றம் புரிந்துள்ளார்கள் என்பதால் வாய் திறக்கவில்லை.

பாஜக தேர்தல் அறிக்கையில் 72 பக்கத்தில் 67 முறை மோடி என்ற வார்த்தை வந்திருக்கிறது. ஆனால் வேலைவாய்ப்பு 4 முறை தான் வந்துள்ளது. காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் 38 முறை வேலைவாய்ப்பு என்ற வார்தையும், 3 இடங்களில் சமத்துவம் என்ற வார்த்தையும் வந்துள்ளது. ராகுல் காந்தியின் பாட்டி இந்திரா காந்தி இல்லை என்றால் இன்று மோடியும், அமித்ஷாவும் இல்லை. இந்திரா காந்தியை பற்றி பேசுவதற்கு மோடிக்கும் தகுதியில்லை, அமித்ஷாவுக்கும் தகுதியில்லை.

தோல்வி பயத்தால் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் ராமர் கோயிலை மூடிவிடும் என பாஜகவினர் பேசி வருகின்றனர். காங்கிரஸ் கட்சி ராமரையும் வணங்கும், பாபரையும் வணங்கும்.

குஜராத்தில் நீட் தேர்வில் முறைகேட்டில் ஈடுபட்டதாக பாஜகவை சார்ந்த 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். நீட் தேர்வு கொண்டு வந்தது மிகப்பெரிய ஊழல் செய்வதற்கு தான். நீட் தேர்வு மாணவ, மாணவிகளின் கனவை அழிக்கும் திட்டம். 

நெல்லை மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயக்குமார் மரணத்தில் காவல்துறை புலன் விசாரணை சரியாக சென்று கொண்டு இருக்கிறது.”

என்று தெரிவித்தார்