கும்லா, ஜார்க்கண்ட்

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தங்கள் கூட்டணி ஆட்சிக்கு வந்தால் அக்னிபத் திட்டம் நீக்கப்படும் எனக் கூரி உள்ளார்.

நாடெங்குமுள்ள 543 தொகுதிகளுக்கு 7 கட்டங்களாக வாக்குப்பதிவு  நடைபெறுகிறது.  கடந்த 19 ஆம் தேதி தமிழநாடு உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த 102 தொகுதிகளில் முதற்கட்ட வாக்குப்பதிவு நடைபெற்றது.  ஏப்ரல் 26 ஆம் தேதி இரண்டாம் கட்ட வாக்குப்பதிவும், மே 7 ஆம் தேதி மூன்றாம் கட்ட வாக்குப்பதிவும் நடைபெற்றது.

ஜார்க்கண்ட் மாநிலம்,  கும்லாவில்  நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி,

“மோடிதான் அக்னிபத் திட்டத்தை மோடி தான் கொண்டு வந்தாரே தவிர  ராணுவம் கொண்டு வரவில்லை. எனவே  இந்தியா கூட்டணி ஆட்சிக்கு வந்தால் அக்னிபத் திட்டத்தை நீக்கிவிடும்.  நாங்கள் நாட்டுக்காக உயிர்த்தியாகம் செய்யும் ராணுவ வீரர்களிடையே பாரபட்சம் காட்ட விரும்பவில்லை. நாட்டுக்காக உயிர்த்தியாகம் செய்யும் எந்த ஒருவருக்கும் தியாகி அந்தஸ்து அளிக்கப்பட்டு. அவர்களுக்கு ஓய்வூதியம் வழங்கப்பட வேண்டும். 

பாஜக  அரசு 5 வகையான வரி விகிதங்களைக் கொண்ட தவறான ஜிஎஸ்டி வரிவிதிப்பு முறையை அமல்படுத்தியுள்ளது. இதை நாங்கள் மாற்றி குறைந்தபட்ச வரி விகிதம் கொண்ட ஜிஎஸ்டியைக் கொண்டு வருவோம். இதனால் ஏழைகள் மீதான வரியை நாங்கள் குறைப்போம். 

பாஜக அரசு பழங்குடியினருக்கு துரோகம் இழைத்து வருகிறது. பழங்குடி இனத்தைச் சேர்ந்த குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவை  புதிய நாடாளுமன்றக் கட்டடத்தின் திறப்பு விழாவுக்கும்,  அயோத்தியில் சிலை பிரதிஷ்டை விழாவுக்கும் அழைக்காததன் மூலம் அவரை பிரதமர் மோடி அவமதித்து விட்டார்.”

என்று உரையாற்றி உள்ளார்