புதுச்சேரி: பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவுகள்  இன்று வெளியான நிலையில்,  புதுச்சேரியில் 92.41% மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் 7லட்சத்து 50ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவமாணவிகள் எழுதிய பிளஸ்2 தேர்வு முடிவுகள் இன்று காலை வெளியிடப்பட்டது.  தேர்வுத்துறை இயக்குனர் சேதுராம வர்மா தேர்வு முடிவுகளை  வெளியிட்டார். மேலும் தேர்வு முடிவுகளை, மாணவர்கள், பெற்றோர்கள், ஆசிரியர்கள் tnresults.nic.in, dge.tn.gov.in ஆகிய இணையதளங்கள் வாயிலாக அறிந்துகொள்ளலாம்,. மேலும், மாணவர்கள் பதிவு செய்துள்ள மொபைல் எண்களுக்கும் தேர்வு முடிவுகள் அனுப்பப்படுகிறது

இந்த நிலையில்,  தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியின்  12ஆம் வகுப்பு பொதுத்தேர்வில், 94.56 சதவீத மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.  கடந்த ஆண்டு 94.03 சதவீத மாணவர்கள் தேர்ச்சி பெற்றிருந்த நிலையில், இந்த ஆண்டு தேர்ச்சி விகிதம் அதிகரித்துள்ளது.

இநத் நிலையில், புதுச்சேரியில் 92.41% மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.    தேர்ச்சி விகிதம் கடந்த ஆண்டை விட இந்தாண்டு உயர்ந்துள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளனர். அதே வேளையில், புதுச்சேரி மாநில அரசு பள்ளி மாணவர்கள் 85.35% பேர் தேர்ச்சி பெற்றுள்ளதாகவும்,   இது கடந்த ஆண்டைவிட 0.27% சதவீதம் குறைவாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

7லட்சத்துக்கு 50ஆயிரம் பேர் எழுதிய பிளஸ்2 தேர்வில், தமிழில்100க்கு 100 எடுத்த மாணவர்கள் எத்தனை பேர்?