சென்னை: தமிழ்நாட்டில் அரசு பேருந்துகள் முறையான பராமரிப்பு இல்லாமல் இயக்கப்படுவதால், தொடர் விபத்துக்கள் ஏற்பட்டு வருகிறது. அதன் தொடர்ச்சியாக சென்னையில் மாநகர பேருந்தின் கதவு கழன்று விழுந்த விபத்தில், பேருந்துக்காக காத்திருந்த பெண் பயணி காயமடைந்தார். இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
‘சென்னை, கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இருந்து 70ஏ வழித்தட எண் கொண்ட பேருந்து ஆவடி நோக்கி நேற்று இரவு சென்று கொண்டிருந்தது. இந்த பேருந்து திருமங்கலம் பேருந்து நிறுத்தம் அருகில் வந்தபோது, பேருந்துக்காக காத்திருந்த பயணிகளை ஏற்றுவதறக்க டிரைவர், பேருந்தின் முன்பக்க தானியங்கி கதவுவை திறந்துவிடும் பட்டனை அழுத்தினார். அப்போது, முன்பக்க கதிவு திடீரென கழன்று விழுந்தது.
இந்த கதவுஎ பேருந்து நிலையத்தில், பேருந்துக்காக காத்திருந்த பெண் பயணி சரிந்து விழுந்தது. இதனால், அவர் காயமடைந்து வலிதாங்க முடியாமல் கதறினார். இதையடுத்து அருகில் இருந்து சக பயணிகள் அவரை மீட்டு, தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர். இது சக பயணிகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்திது. ஆனால், இதுகுறித்து வழக்கு பதிவு செய்யாமல், பேருந்து ஓட்டுநர் மற்றும் நடத்துனர்கள் தலையிட்டு, , காயமடைந்த பெண்ணுக்கு சிகிச்சை அளித்ததுடன், அவருக்கு சிறிய தொகை கொடுத்து, வீட்டுக்கு அனுப்பி வைத்ததாகக் கூறப்படுகிறது.
இந்த தகவல் காட்டுத்தீ போல பரவிய நிலையில், காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். பேருந்தின் டிரைவரிடம் விசாரணை செய்தபோது காயமடைந்த பெண் சிகிச்சை முடிந்து வீட்டிற்கு சென்றுவிட்டதாக கூறினார். காயமடைந்த பெண்ணின் பெயர், முகவரி கேட்டபோது டிரைவர், எங்களுக்கு ஒன்றும் தெரியாது என கூறிவிட்டு சென்றுள்ளார். இதனால் காயமடைந்த பெண் யார் என்பது குறித்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.
ஏற்கனவே சென்னையில், கடந்த பிப்ரவரி மாதம் அரும்பாக்கத்தில் ஓடும் பேருந்தில் ஏற்பட்ட ஓட்டையில் தவறி விழுந்ததில் பெண் ஒருவர் உயிர்தப்பிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அதுபோல , பேருந்தின் படிக்கட்டுக்கள் கழன்று விழுந்த விவகாரமும், பேருந்து நடத்துனர், இருக்கையுடன் கழன்று சாலையில் விழுந்த சம்பவங்களும் அரங்கேறின. இதையடுத்து, அரசு பேருந்துகள் , மாநகர பேருந்துகள் சரியாக உள்ளதா? என ஆய்வு செய்து 48மணி நேரத்தில் அறிக்கை அளிக்க தலைமைச்செயலாளர் அறிவுறுத்தலின் பேரில், போக்குவரத்து துறை அறிவித்தது. ஆனால், இந்த அறிவிப்பு வெளியாகி 72 மணி நேரத்திற்குள் மீண்டும் பேருந்து கதவு கழன்று விழுந்துள்ள சம்பவம் அரங்கேறி உள்ளது.
தமிழகத்தில் திமுக அரசு பதவி ஏற்றதும், பெண்களுக்கு இலவச பேருந்து சேவையை நடத்தி வருகிறது. இதனால் ஏற்கனவே பெரும் நஷ்டத்தில் தத்தளித்து வரும் அரசு பேருந்து துறை, மேலும் கடுமையான நஷ்டத்தில் இயங்கி வருகிறது. இதனால், பேருந்துகளை முறையாக பராமரிக்காமலும், பழுதான பகுதிகள் அகற்றப்படாலும், அப்படியே இயக்க ஓட்டுநர்கள் கட்டாயப்படுத்தப்படுவதாக கூறப்படுகிறத. இதனால், கடந்த சில நாட்களாக பேருந்தின் உதிரி பாகம் உடைந்து விழும் சம்பவம் அரங்கேறி வருகிறது. இதற்கு அரசியல் கட்சிகள், பொதுநல ஆர்வலர்கள், பொதுமக்கள் என பல தரப்பினரும் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர், காலாவதியான மற்றும் முறையான பராமரிப்பு இல்லாத பேருந்துகளை தொடர்ந்து இயக்கி அதில் பயணிக்கும் பொதுமக்களின் உயிரோடு விளையாடுவதை உடனடியாக நிறுத்த வேண்டும் என வலியுறுத்தப்பட்டு வருகிறது.
மேலும், பொதுமக்களின் அத்திவசிய தேவையான போக்குவரத்து துறை முறையாக செயல்படுத்தாத அமைச்சர் சிவசங்கர் பதவி விலக வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டு வருகிறது.
ஓடும் பஸ்ஸில் இருக்கை கழன்று சாலையில் தூக்கி வீசப்பட்ட நடத்துனர்! அரசு பேருந்தின் அவலம்