சென்னை: தாம்பரத்தில் இருந்து கொல்கத்தா சந்த்ராகச்சி இடையே 2 வாராந்திர சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்து உள்ளது. இந்த ரயிலானது, எழும்பூர் வழியாக தாம்பரத்தில் இருந்து இயக்கப்படுகிறது.
இதுதொடர்பாக தென்னக ரயில்வே வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் 2 வாராந்திர சிறப்பு ரயில்கள் சென்னை எழும்பூர் வழியாக இயக்கப்படவுள்ளதாக குறிப்பிட்டுள்ளது.
சிறப்பு ரயில் 1
வண்டி எண் 06089 தாம்பரம் – சந்த்ராகச்சி வாராந்திர சிறப்பு ரயில், மே 8, 15, 22, 29ம் தேதிகளில் பகல் 1மணிக்கு தாம்பரத்தில் இருந்து புறப்பட்டு மறுநாள் இரவு 9.20க்கு சந்த்ராகச்சி சென்றடையும். இந்த ரயிலில் 20 இரண்டாம் வகுப்பு படுக்கை வசதி கொண்ட பெட்டிகள் மற்றும் 2 முன்பதிவில்லா பெட்டிகள் என 22 பெட்டிகள் இருக்கும்.
மறு மார்க்கத்தில் வண்டி எண் 06090 சந்த்ராகச்சி – தாம்பரம் வாராந்திர சிறப்பு ரயில், மே 9, 16, 23, 30ம் தேதிகளில் இரவு 11.40க்கு புறப்பட்டு மூன்றாம் நாள் காலை 9.45க்கு தாம்பரம் வந்து சேரும்.
சிறப்பு ரயில் 2.
வண்டி எண் 06095 தாம்பரம் – சந்த்ராகச்சி வாராந்திர சிறப்பு ரயில், மே 9, 16, 23, 30ம் தேதிகளில் பகல் 1மணிக்கு தாம்பரத்தில் இருந்து புறப்பட்டு மறுநாள் இரவு 9.20க்கு சந்த்ராகச்சி சென்றடையும்.
மறு மார்க்கத்தில் வண்டி எண் 06090 சந்த்ராகச்சி – தாம்பரம் வாராந்திர சிறப்பு ரயில், மே10, 17, 24, 31ம் தேதிகளில் இரவு 11.40க்கு புறப்பட்டு மூன்றாம் நாள் காலை 9.45க்கு தாம்பரம் வந்து சேரும்.
இந்த ரயிலில் ஒரு இரண்டாம் வகுப்பு படுக்கை வசதி கொண்ட பெட்டியும், 7 மூன்று அடுக்கு குளிர்சாதன வசதி கொண்ட பெட்டியும், 7 இரண்டாம் வகுப்பு படுக்கை வசதி கொண்ட பெட்டிகள் மறறும் 5 முன்பதிவில்லா பெட்டிகள் என 20 பெட்டிகள் இருக்கும்.
இவ்வாறு கூறப்பட்டுள்ளது.