ரோடு

ந்திய கம்யூனிஸ்ட் கட்சி செயலர் முத்தரசன் தோல்வி பயத்தால் பிரதமர் தாம் என்ன பேசுவது எனத் தெரியாமல் பேசுவதாகக் கூறி உள்ளார்.

நேற்று ஈரோடு பெரியார் நகரில் உள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் இன்று அக்கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் செய்தியாளர்களிடம்,

” கடந்த 10 ஆண்டுகளில் மத்திய அரசு கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை என இந்தியா கூட்டணி கட்சிகள் விமர்சித்து வருகிறது.  மக்களை பிளவுபடுத்தும் வகையில் ஒரு பிரதமர் பேசுவது நாகரீகம் அல்ல. 

தாம் தேர்தலில் வெற்றி பெற்றே ஆக வேண்டும் என மக்களிடையே மோதல்களை ஏற்படுத்த வேண்டும் என பேசுவது ஜனநாயகத்திற்கு எதிரானது. 

நடந்து முடிந்த முதற்கட்ட தேர்தல் பா.ஜ.க.வுக்கு எதிராக உள்ளது. எனவே தோல்வி பயத்தால் என்ன பேச வேண்டும் என தெரியாமல் பிரதமர் மோடி பேசியிருக்கிறார்.  

மேகேதாதுவில் இந்தியா கூட்டணி ஆட்சிக்கு வந்தால் அணை கட்டுவோம் என டி.கே சிவக்குமார் சொல்வது வாக்கு கேட்பதற்காக சும்மா சொல்கிறார். மேகேதாதுவில் தமிழகத்தின் அனுமதி இல்லாமல் அணை கட்ட முடியாது என்பதை அவர்கள் நன்கு அறிவார்கள். 

சமீபத்தில் விருதுநகரில் வெடிமருந்து வெடித்து சிலர் உயிரிழந்த நிலையில் குவாரிகளை முறைப்படுத்த வேண்டும். குவாரிகளில் மேற்கொள்ளபட வேண்டிய பாதுகாப்பு முறைகளை பின்பற்ற வேண்டும்”. 

என்று கூறினார்.